சீன எக்சிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei) ஜனாதிபதி அலுவலகத்தில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
எதிர்காலத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் சீன பெரு நிறுவனங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் பிரதித் தூதுவர் தெரிவித்தார்.
இதன் போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.