60 வயதை பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

Share

Share

Share

Share

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான உழவர் சந்தையில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதி வரை பேரணியாக சென்றனர்.

அங்கு விவசாயிகள் அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம்