இலங்கை – இந்திய பக்தர்களின் பங்களிப்புடன் கச்சை தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை நிறைவடைய உள்ளது.
இந்த முறை இந்திய பக்தர்கள் சுமார் 1000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
எனவே இலங்கை – இந்திய பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பக்தர்களுக்காக குறிக்கட்டுவானில் இருந்து விசேட படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.