கடலில் ஹெரோயின்

தென் கடலில் பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கடற்படையினரால் 125 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இராஜாங்க கல்வியமைச்சரின் அறிவிப்பு

திட்டமிட்டப்படி நாளை (17) சலல அரச பாடசாலைகளும் இயங்கும் என இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை பாடசாலைகள் திறக்கப்படாது என பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாகனுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்

இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு பெரும் கஷ்டமாக இருக்கும். எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது. இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க […]

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாட்னாவில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் ஒக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 […]

கடன் வாங்கிய நாடுகள் இதுவரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகளை நிர்ணயிக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடன் வாங்கிய நாடுகள் இது வரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் கடன்கள் இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்து செல்லும் கொந்தளிப்பான ஆண்டு

இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் பல மாற்றங்கள் ஒன்றாக நிகழ்ந்து மிகக் கொந்தளிப்பான ஒரு ஆண்டு நம்மைக் கடந்து போகிறது.

இந்த ஆண்டில்தான் இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அதற்கு எதிராக சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள்.