ரொறன்ரோ பாடசாலைகளில் குரோத உணர்வைத் தூண்டும் சம்பவங்கள்

ரொறன்ரோவில் அமைந்துள்ள பாடசாலைகளில் குரோத உணர்வு சம்பவங்கள் கூடுதலாக பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து இரண்டாயிரம் பெற்றோர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபைக்கு இந்த இந்த சம்பவங்கள் தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். பாடசாலைகள் பலவற்றில் குரோத உணர்வைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஸ் கொலம்பியாவில் உயிரிழந்துள்ள ஐந்து மில்லியன் கோழிகள்

பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் ஐந்து மில்லியன் கோழிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பறவைக் காய்ச்சல் காரணமாக இவ்வாறு கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பறவைக் காய்ச்சல் பரவுகை காரணமாக மாகாணம் முழுவதிலும் பெரும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. பண்ணை உரிமையாளர்கள் இதனால் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் பறவைப் பண்ணைகளில் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனிய திரைப்பட போட்டியில் சாதித்த இலங்கை இளைஞன்…

ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட்  பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு…. ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய […]

கனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா – இந்தியா

இந்தியா கனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், வீசா சேவைகளும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக கனடியர்களுக்கு ஈ வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஈ வீசா வழங்கும் நடைமுறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாகனம் வெடித்து இருவர் பலி

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் உள்ளது. ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். மற்றவை லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ் பிரிட்ஜ் ஆகும். இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ரொறன்ரோவில் போதை பொருள் மீட்பு

ரொறன்ரோவில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 551 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் மற்றும் 441 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல் மெதம்பெட்டமைன் ஆகிய போதைப்பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதி கூடிய தொகை போதைப் பொருள் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகக் […]

எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு

எட்மோன்டன் பகுதியில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எட்மோன்டனில் காணப்படும் பார்மஸிகளில் இவ்வாறு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தியாவசியமான மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் மருந்து வகைகளை நிரம்பல் செய்ய முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில வகை மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்க நேரிடுவதாக நோயாளிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.

காசாவின் மனிதாபிமான நிலைமைகள் பெரும் கவலை – கனடிய பிரதி பிரதமர்

காசாவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கனடிய அரசாங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அண்மையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொது வெளியில் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில், காசாவின் மனிதாபிமான நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாக கனடிய பிரதி பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார். காசா பிராந்தியத்திலிருந்து கிடைக்கப்பெறும் புகைப்படங்கள் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காசாவின் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்துள்ளது என்பது பலராலும் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்hளர். இதேவேளை, இஸ்ரேலிய […]

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள்

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான போதைப்பொருள் கனடாவிலிருந்து கணேமுல்ல பிரதேச முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பொதியில் 60 கோடி பெறுமதியான 6 கிலோ கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த முகவரியின் உரிமையாளர் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட கனடா பிரதமர்

கனடாவின் வான்குவரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளனர். உணவுவிடுதியொன்றில் பிரதமர் காணப்பட்டவேளை அந்த பகுதியை சுமார் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். சைனாடவுனில் இது இடம்பெற்றதாகவும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக 250க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்தநிறுத்தம் என கோசம் எழுப்புவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.