” மெளனகுரு” இயக்குநரின் புதிய படம் ” ரசவாதி” ! ஹீரோவாக அர்ஜூன் தாஸ்

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’டைடிலை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா […]
” ஹப்பி பேர்த் டே .. மாளவிகா” தங்கலான் படக்குழு போஸ்டர் பரிசு!

நடிகை “மாளவிகா மோகனனின் ” பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து “தங்கலான்” படக்குழு, போஸ்டரை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறது.
ஜெயிலருக்கு அஞ்சி முந்தி வரும் 7 திரைப்படங்கள்

ஜெயிலர் என்ற பிரம்மாண்ட படத்திடம் சிக்காமல் இருக்க இந்த வாரமே தமிழில் 7 சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்துடன் சிக்காமல் இருக்க இந்த வாரம் தமிழில் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெரப், சிவராஜ்குமார், […]
இளையராஜாவாக தனுஷ்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கு இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் பால்கே தீர்மானித்து இருக்கிறார். ரசிகர்களால் ‘இசைஞானி’ என அழைக்கப்படும் இளையராஜா, 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 70களில் தொடங்கிய அவர் இசைப் பயணம் இப்போதுவரை இனிமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக்குவது தனது கனவு என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி தெரிவித்துள்ளார். இவர் அமிதாப்பச்சன் நடித்த‘சீனி கம்’, ‘பா’, தனுஷ், அமிதாப்பச்சன் நடித்த ‘ஷமிதாப்’உட்படப் பல […]
” நமகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்” பஞ்சுடன் வெளியானது ” ஜெயிலர்” ட்ரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ” ஜெயிலர்” திரைப்படத்தின் டிரைலர் இன்று புதன்கிழமை வெளியானது சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஏராளமான நடிக நடிகைகள் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றுள்ளது இன்று வெளியான டிரைலரில் அனல் தெரிக்கும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்திருக்கிறது. ” நமக்கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்” என ரஜினியின் மாஸ் வசனத்துடன் […]
துரு விக்ரமுடன் கபடி ஆடும் மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் படங்களை இயக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்தாக கையிலெடுத்திருக்கும் சப்ஜெக்ட் ” கபடி” 1990 களில் தூத்துக்குடியில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை தமது பாணியில் இயக்க இருக்கிறார் செல்வராஜ். இதற்காக நடிகர் விக்ரமின் மகனான துருவிக்ரம் கடுமையான கபடி பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்.; இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பமாகிறது. படத்தின் ஊடாக என்ன சர்ச்சையை மாரி கிளப்ப போறாரோ
93 வயதில் மோகனுடன் இணையும் சாருஹாசன்!

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். ⁸ 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் […]
நடிகர் சரத்பாபு காலமானார்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் […]
ரஜினி + கபில்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி சென்னையிலிருந்து மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் காலமானார்.