கராத்தே வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

  மத்திய மாகாணத்தில் சொடோகன் 2023 கராத்தே செம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கம்பளையைச் சேர்ந்த எஸ்.பி, சந்திரமோகன் சொடோகன் கராத்தே கழகத்தின் வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர், கண்டி திகனயிலுள்ள மத்திய மாகாண விளையாட்டுத் திணைக்கள அரங்கில் இந்த போட்டிகள் நடைப்பெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவுகளை கொண்ட வீரர்கள் கலந்துகொண்டு இருந்தனர். கம்பளை வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும் . கம்பளையை சேர்ந்த […]

பிரான்ஸ் கரப்பந்தாட்ட போட்டி!

2023 அக்டோபர் 1ம் திகதி பிரான்ஸ் Allblacks விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 8 அணிகள் கழந்து கொண்ட கரப்பந்தாட்டப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் Allblacks Super Sunday மற்றும் Worries அணிகள் விளையாடி Allblacks super Sunday அணியினர் வெற்றிக் கோப்பயை தனதாக்கிக்கொண்டனர். ஆட்ட நாயகனாக Yaseer (கரப்பந்தாட்ட வீரர் ) மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக Nashif (கரப்பந்தாட்ட வீரர் ) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். தகவல் Allblacks விளையாட்டுக்கழக ஊடகப் பிரிவு. பிரான்ஸ்

சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன்.!

நூருல் ஹுதா உமர் சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த  பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் மற்றும்  விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு இன்று (27) பாடசாலையில் விசேட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் […]

சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர் பயஸ் தெரிவு

சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு வீரர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய வீரராக லியாண்டர் பயஸ் தெரிவாகியுள்ளார். 50 வயதான பயஸ், 2024 ஆம் ஆண்டுக்கான வகுப்பிற்கு அறிவிக்கப்பட்ட ஆறு பரிந்துரையாளர்களில் ஒருவர். அவர் வீரர் பிரிவில் காரா பிளாக், அனா இவானோவிக், கார்லோஸ் மோயா, டேனியல் நெஸ்டர் மற்றும் ஃபிளாவியா பென்னெட்டா ஆகியோருடன் போட்டியிடுவார். “இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் பிளேயர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய மனிதர் நான் என்பது எனக்கு […]

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்தியா வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை தொடங்குகின்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய […]

ஒலுவில் அல்-ஹம்றா மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை

  (எஸ்.அஷ்ரப்கான்) மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலய மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார். கந்தளாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கிடையிலான ‘மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி – 2023 ‘ இல் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவனான எம்.ஏ.ஆர்.ஹாபீஸ் ரய்ஹான் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைப் வென்றுள்ளார். இம்மாணவன் 60 மீற்றர், 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சிகளில் முறையே 02, 03ஆம் இடங்களையும் பெற்றுள்ளார். […]

தேசிய  ரீதியில்  சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி லக்சாயினி.!

(வாஸ் கூஞ்ஞ) 20.09.2023கொழும்பில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வரும் தேசியமட்ட விளையாட்டு நிகழ்வில் தேசிய ரீதியில் ரைகொண்டோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி. மன்னார் பெரியபண்டிவிரிச்சான்  மகா வித்தியாலயத்தின் மாணலியே ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி  குறித்த சாதனையை மாணவி லக்சாயினி. படைத்துள்ளார் மன்ஃபெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசியமட்டத்தில் 2-ம் இடத்தினைப் பெற்று வெள்ளி பதக்கத்தினை தனதாக்கி […]

பாடசாலையில் விளையாட்டு துறை அபிவிருத்திக்கு நிதி உதவி !

  பலாங்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் கிரிக்கெட் அணி இம்முறை பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற பாடசாலையின் கிரிக்கெட் அணி, அநுராதபுரத்தில் நடைபெறும் அகில இலங்கை போட்டி தொடருக்கு செல்வது தொடர்பாக கல்லூரியின் அதிபர் அவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, அவர் இவ்விடயம் குறித்து கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதனை தொடர்ந்து, 91,400.00ரூபாய் நிதி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிதி […]

பலம்பொருந்திய மட்டு.அணிகளை வீழ்த்தி முன்னேறிய ஓட்டமாவடி வளர்பிறை

  மட்டக்களப்பு யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கணேஷமூர்த்தி ஞாபகார்த்த அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மாவட்டத்திலுள்ள மிகப்பலம் வாய்ந்த 48 அணிகள் கலந்து கொண்டன. இச்சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை அணியினர் மாவட்டத்தின் சிறந்த அணிகளான ரெட்ணம்ஸ், யங் ஸ்டார், இராமகிருஷ்ணா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதியாட்டத்திற்குத் தெரிவாகியிருந்தனர். அரையிறுதிப்போட்டியில் மட்டக்கப்பு மாவட்டத்தின் மிகப்பலம் பொருந்திய டிஸ்கோ அணியினை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியினைத் தழுவியிருந்த நிலையில், தொடரின் […]

கல்முனை சமாதான பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்..!!!

நூருல் ஹுதா உமர் கல்முனையில் சுமார் 31 வருடங்களாக இயங்கி வருகின்ற சமாதான பாலர் பாடசாலையினால் நேற்று (17) சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி ஒன்று சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச். ஹிஜ்ரா தலைமையில் கமு/கமு/அல்- பஹ்றியா தேசிய பாடசாலை மைதானத்தில் ஏற்படாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் கலந்துகொண்டார். மேலும் அதிதிகளாக […]