IPL ஓய்வு குறித்து தோனியின் பதில்…

“மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்” என் தோனி தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே Off போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோனி மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார் “இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை. பிராவோ போன்ற உதவியாளர்கள் இந்த விஷயத்தில் […]
LPL போட்டிகளில் ஆட்ட நிர்ணயமா?

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் அபுதாபி T10 போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுப்பட முயன்ற குற்றச் சாட்டில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு எதிராக தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. 33 வயதான டெவோன் தோமஸ் என்பவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ICC ஊழல் தடுப்புச் சட்டங்களின்படி, தோமஸ் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் உள்ளது. 2021 ஆம் […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 04 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ண போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் நடக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இறுதிப் போட்டியில் CSK

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று – 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் […]
இலங்கைக்கு சில முக்கியமான போட்டிகள்

ஜூன் 18 ஆம் திகதி தொடங்கும் உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. 10 அணிகள் “A” மற்றும் “B” என இரு குழுக்களாகப் போட்டியிடும், மேலும் 6 அணிகள் “சூப்பர் சிக்ஸ்” சுற்றுக்கு தகுதி பெறும். அதில், 4 அணிகள் “பிளே ஆஃப்” சுற்றுக்கு தகுதி பெறும், இதில் இரண்டு அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். குழு A வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா […]
LPL ஏலம் பற்றிய அறிவிப்பு

2023 LPL போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஜூன் 11ம் திகதி அதற்கான ஏலம் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன் பட்டம் வெல்லாத RCB

2009, 2011 மற்றும் 2016 என மூன்று முறை கோப்பையை நெருங்கிய RCB அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. நடப்பு சீசனிலும் பிளே- Off வாய்ப்பை கடைசி லீக் போட்டியில் இழந்த ஆர்சிபி வீரர்கள் கலங்கிய கண்களோடு விடைபெற்றனர். RCB இறுதிப் போட்டி மட்டுமல்லாது 5 முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஓர் அணி.
IPL: முதலாவது தகுதி சுற்றில் CSK Vs GT

IPL லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால், இன்று போட்டிகள் எதுவும் நடைபெறாமல் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24 திகதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் – கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதிச் சுற்றில் ரைபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர். இதில் ரைபாகினா 6-4, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக அன்ஹெலினா போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ரைபாகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற […]
SLC தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.