ரெயின்போ ஜெர்சியில் களம் காணும் டெல்லி கேபிடல்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி (DC) நாளை எதிர்கொள்கிறது . இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் டெல்லி அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சீசன் முதல் இந்த வழக்கத்தை டெல்லி அணி கொண்டுள்ளது. சீசனின் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் இந்த ரெயின்போ ஜெர்சியை டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள். இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய எந்தவொரு போட்டியிலும் […]
நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு…

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 23ம் திகதி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே 3 ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. ICC மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் கீழ் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
திமுத்துக்கு அழைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ஆரம்பக் குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பெயரிடப்பட்ட 30 பேர் கொண்ட ஆரம்பக் குழாமில் இடம்பெற்றிருந்த குசல் ஜனித் பெரேரா காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. எவ்வாறாயினும், ஆரம்ப அணியில் திமுத் கருணாரத்ன சேர்க்கப்பட்டாலும், அந்த அணியில் இருந்து குசல் பெரேரா முழுமையாக நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கின் 4 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணியால் குறித்த குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 29 வயதான பெண்ணொருவர், தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது, 32 வயதான தனுஷ்க குணதிலக்க மீது இந்த […]
T20 – சமரி முதல் 10 இடங்களுக்குள்..

மகளிருக்கான T20 போட்டியில், உலகின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசையில் இலங்கை மகளிர் அணித் தலைவர் சமரி அத்தபத்து முதல் 10 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளார். தரவரிசையில் அவர் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய சமரி அத்தபத்து, 103 ஓட்டங்களைப் பெற்றார். மேலும், பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தியதன் காரணமாக அவர் மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசையில் […]
IPL – CSK நிலை என்ன?

IPL: மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் நேற்றுடன் 62 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி முதல் 2 இடங்களை பிடிப்பது உறுதி செய்யப்பட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின. பிளே ஆப் சுற்றின் 3 இடத்துக்கு 7 அணிகள் […]
கிரிக்கெட்டில் மூன்று விதிகள் மாறுகின்றன

ICC 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட ICC விதிகள் ஜூன் 1 முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி 1: நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும். விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். […]
முதற்கட்ட இலங்கை அணி

உலகக் கிண்ண தகுதிச் சுற்று மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது. 7 பேட்ஸ்மேன்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 ஆல்-ரவுண்டர்கள் அடங்கிய ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஆரம்ப அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். T20 உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமிர 7 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு […]
இலங்கை கிரிக்கெட்டுக்கான ஆலோசனைக் குழு

இலங்கை கிரிக்கெட்டுக்கான (SLC) ஆலோசனைக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். இதன் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மகளிர் அணிக்கு மாபெரும் வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது T20யில் போட்டியை நடத்தும் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதன்படி, இலங்கை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி […]