இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை அணி சார்ப்பில் திமுத் […]
முரளியின் கதை…

உலகில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை கொண்ட திரைப்படத்தின் போஸ்டர் இன்று (17) வெளியாகியுள்ளது. அந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் பிரபல இந்திய நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். திராவிட மொழியில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோஹிதாஷ்வா ஆகியோர் முக்கிய […]
நண்பா மோதுவோமா?

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுவாகும். அயர்லாந்து அணி இதுவரை 04 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் அவர்களால் எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெற முடியவில்லை. இதேவேளை, அயர்லாந்துடனான இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதாக […]
காலிக்கு வரும்போது, வீட்டைப் போல உணர்கிறோம் : திமுத்

இலங்கை அணிக்கும் சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை (16) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இரண்டு போட்டிகளைக் கொண்டது. அதன்படி, இலங்கை அணியினர் நேற்றும் (14) இன்றும் (15) பயிற்சிகளில் ஈடுபட்டனர் தலைவர் திமுத் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் காலிக்கு வரும்போது வீட்டைப் போல உணர்கிறோம் வானிலை பற்றி சொல்ல முடியாது. நாங்கள் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் விலகல்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அடுத்த வாரம் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள ரபேல் நடால் இந்தப் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி முதலே காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், இந்தப் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் ஏற்கனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மொன்டி காலோ டென்னிஸ் போட்டிகளில் இருந்தும் காயம் காரணமாக விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, ரக்பிக்கு மீண்டும் முழு உறுப்பினர்

இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு மீண்டும் ஆசிய ரக்பியின் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வது தொடர்பான இலங்கை விளையாட்டு அமைச்சின் உறுதிப்படுத்தலைக் கருத்தில் கொண்டு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக FIFA முடிவு

இரண்டு சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்து இலங்கை தேசிய கால்பந்து அணியை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகளான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்தும் மற்றும் 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்டப் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இருந்தும் இலங்கை அணி நீக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் […]
அயர்லாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி

அயர்லாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை குழாத்தில் 15 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுக்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிஷான் மதுஷ்க, துஷான் ஹேமந்த மற்றும் மிலான் ரத்நாயக்க உள்ளிட்ட இளம் வீரர்கள் சிலருக்கும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் திக்வெல்ல, […]
வருத்தத்துடன் ஜயசூரிய

1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி உலகக் கிண்ண போட்டியொன்றின் தகுதிச் சுற் றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் முதலாவது கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து அணி நாட்டை வந்தடைந்தது

இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி நேற்று (09) மாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி தீவுக்கு […]