தேசிய விளையாட்டுக் சபை தலைவர்

விளையாட்டு கழகங்களில் பதவிகள் பாராது புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய விளையாட்டுக் சபை தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். உதாரணமாக எந்தவெரு விளையாட்டு கழகத்திலும் தலைவர் பதவியை இருமுறை அதாவது 4 வருடங்கள் வகிக்க இயலுமான வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sri lanka கிரிக்கட்

ணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதானிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யும் உத்தரவை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு […]

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட் வாஷ்’ செய்தது. மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 […]

வரும் ஏப்ரலில் தொடங்குகிற ஐபிஎல் 16-வது சீசன்

ஐபிஎல் 16-வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. . இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடக்கும். இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் எம்எஸ் […]

சந்திக ஹத்துருசிங்க

பங்களாதேஷ் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹத்துருசிங்க 2014 தொடக்கம் 2017 வரை இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றினார். பின்னர் ஹத்துருசிங்க அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நிவ் சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கடமையாற்றினார். பங்களாதேஷ் அணியின் பிரதம பயிற்சியாளராக கடமையாற்றிய ரசல் டொமினிகோ அண்மையில் பதவி விலகியமை குறிப்பிடதக்கது.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில்

இந்திய அணியை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் […]

நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் தீப்தி […]

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்காக விளையாடுவதே தமது ஒரே அபிப்பிரயாகும் என இலங்கையணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களில் தாம் அரசியல் ரீதியாக சம்பந்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளர். தனக்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை என தசுன் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 தனுஷ்க குணதிலக்க

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விளையாட்டுத் தடை விதிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த T20 உலகக் கிண்ணத்தின் போது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குணதிலக்க தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் மோதினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் அளிக்கும் விதத்தில் விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த போட்டியில் 6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில் ஸ்டீபனோஸ் சிட் சிபாஸை வென்று சாம்பியன் […]