ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் பாபர் அஸாமின் அதிரடி ஆட்டம்! 238 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி! நேபாளம் படு பள்ளம்!

ஆசியகிண்ணம் ஆண்களுக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதே ஒருநாள்  கிரிக்கெட் போட்டித்தொடர் பாகிஸ்தானில் நேற்று ஆரம்பமானது. தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் நோபாள அணிகள் முல்டானில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தானிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப நான்கு விக்கெட்டுக்களையும் 124 ( 27. 5 ஓவர்களில்) ஓட்டங்களுக்கு இழந்த  பாகிஸ்தான் அணி 200 ஐ தாண்டுமா என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆயினும் அதிரடி ஆட்டக்காரரான பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர்  அஸாம்  ரசிகர்களுக்கு இப்திகார் அகமட்டுடன் […]

சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப் : றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.

  (எஸ்.அஷ்ரப்கான்) முதலாவது சர்வதேச மஸ்ஜர்ஸ் தடகள சம்பியன்ஷிப்- 2023 போட்டியின் சர்வதேச சிரேஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிய கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் (400 m Hurdles,100 m Hurdles) தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார். கடந்த 19, 20ந் திகதிகளில் தியகம சர்வதேச மைதனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குறித்த வெற்றிகளை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் பெற்றுள்ளார். இவகுக்கான […]

கூடைப்பந்தாட்டப்போட்டியில் கார்மேலியன்ஸ் சம்பியன்களானது.

  (அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியின் கூடைப்பந்தாட்டப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் மைதானத்தில் இடம்பெற்றது. இவ்வாண்டுக்கான 34வது இளைஞர் கழக விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டபோட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் கார்மேலியன்ஸ் இளைஞர் கழகம் சம்பியன்களானது.

மர்ஹூம் MIM.IQBAL ஞாபகர்த்த கிண்55ணத்தை வென்ற “YSSC” அணி!

  கல்முனை சன்னி மொளன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய மர்ஹூம் MIM.IQBAL ஞாபகார்த்த கிண்ணம்-2023 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் YSSC அணியினர் கல்முனை Sunny Mount SC அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் சம்பியன் கிண்ணம் 50000/- பணப்பரிசு மற்றும் 100000/- Abdullah Mens நிறுவனத்தின் Gift Voucher னையும் பெற்றுக்கொண்டனர்.. இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த Shakeel தலைமையிலான YSSC உதைபந்தாட்ட அணி […]

யாழ்.அணியை வீழ்த்தி ஏறாவூர் அலிகார் அணி வெற்றி

(ஏறாவூர் சாதிக் அகமட் ) பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தேசிய மட்டத்தில் நடாத்தும் பாடசாலை மட்ட DIVISION – 01 உதைப்பந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள அலிகார் தேசிய பாடசாலை அணி தனது இரண்டாவது போட்டியில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணியை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்கொண்டதுடன், யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணிக்கு முதல் போட்டியாகவும் அமைந்தது. பலம்வாய்ந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட விறுவிறுப்பான இப்போட்டி உதைப்பந்தாட்ட ரசியர்களுக்கு சுவாரஸ்யமான போட்டியாக அமைந்திருந்ததுடன், 06 […]

செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருடப்பூர்த்தி : பழைய மாணவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

(ஏறாவூர் சாதிக் அகமட்)   மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பாடசாலை தினத்தையொட்டி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 23.08.2023ம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தே.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, ஏறாவூர் பொலிஸார் பொறுப்பதிகாரி, செங்கலடி […]

குர்பாஸின் 151 ஓட்டங்கள் ஆப்கான்ஸ்தான் அணியை காப்பாற்றவில்லை! தொடரை வென்றது பாகிஸ்தான் அணி !!

பாகிஸ்தான் ஆப்கான்ஸ்தான் அணிகளுகிடையில் இலங்கையில் நடைப்பெறும் மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1 விக்கெட்டினால் த்ரிலர் வெற்றியை பெற்றது. இதன்படி 2- 0 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 227 ஓட்டங்களை பெற்றது. இப்ராஹும் சத்ரான் 80 ஓட்டங்கள் பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணி அதிக ஓட்டங்களை […]

செஸ் உலக கிண்ணம் கார்ல்சனிடம் ! மக்களின் மனங்களோ பிரக்ஞானந்தாவிடம்!

  செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். டை-பிரேக்கர் சுற்றில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினார் பிரக்ஞானந்தா ஆயினும் அவரது திறமையை பாராட்ட வேண்டும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரர்களுக்கும் மிக முக்கியமா இந்திய இளம் வீரர்  அவர்களுக்கும் எமது #வாழ்த்துக்கள்!! இந்த போட்டி குறித்து  கருத்து வெளியிட்ட பிரக்ஞானந்தா Look at the confidence of Pragg. 👏🇮🇳With this self […]

மருதமுனை எலைட் கழகத்ற்கு கலந்விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!.

நூருல் ஹுதா உமர்  மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபா அவர்களுடன் மருதமுனை பிரதான வீதி அமைந்துள்ள முஸ்தபா கம்பளைஸ் நிறுவன காரியாலயத்தில் 2023.08.21 ஆம் திகதி திங்கள் மாலை இடம்பெற்றது. மேலும் எலைட் விளையாட்டு கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் […]

பேசாலை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டிகள்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கின் கீழ் இயங்கும் சென்.மேரிஸ் , சென் விக்ரறீPஸ மற்றும் அமலதாசன் ஆகிய மூன்று முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள். சனிக்கிழமை (19) பேசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கல்வி வலய உதவிப் பணிப்பாளர் ஞானராஐ; , பேசாலை மற்றும் கீழியன்குடியிருப்பு பங்குத் தந்தையர்களான அருட்பணியாளர்கள் ஏ.ஞானப்பிரகாசம் , லோறன்ஸ் அடிகளாhகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். (வாஸ் கூஞ்ஞ)