பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 11 பேர் உடல் சிதறி பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் வஜிரிஸ்தானில் உள்ள ராணுவச்சாவடி அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமான தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஷவால் என்ற பகுதி அருகே சென்றபோது திடீரென அந்த லாரியின் அடியில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்து சிதறியது. இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு […]

அமெரிக்காவில் இந்திய இளைஞன் தற்கொலை

அமெரிக்காவில் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு இந்திய இளைஞன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய தம்பதி, தங்கள் 6 வயது மகனுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் காணப்பட்டன. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பெயர்கள் யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37), யாஸ் ஹான்னல் (6) என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமொக்காவில் பால்டிமோர் கவுன்டி […]

31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் கல் குழந்தை

சீனாவில் ஹுவாங் யிஜுன் என்ற பெண் 31 வயதில் கர்ப்பமாகி 92 வயதில் கல் குழந்தையைப் பெற்றெடுத்து 60 ஆண்டுகள் வயிற்றில் சுமந்து தாய்மையின் மகிழ்ச்சியைப் பெறாமல் மருத்துவ உலகையே அதிர செய்துள்ளது. ஹுவாங் யிஜுன் என்ற சீனப் பெண் 1948-ம் ஆண்டு தனது 31-வது வயதில் கர்ப்பமானார். தனக்கு குழந்தை பிறக்கப் போவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவளது மகிழ்ச்சி நீர்த்துப் போனது. எல்லோரையும், போலல்லாமல், அவள் கர்ப்பத்தில் ஒரு பிரச்சனையுடள் […]

தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை- இம்ரான் கானின் மனைவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என கூறி உள்ளார். இது குறித்து புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- […]

‘நான் ஒரு பாவி’, ‘இந்த சிசுக்களின் இறப்புகளுக்கு நான்தான் காரணம்’ – செவிலியப் பெண்

வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மகப்பேற்று வைத்தியசாலையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி எனும் 33 வயதுடைய செவிலியப் பெண் பணியாற்றினார். இவர் கடமையிலிருந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேற்றுப் பிரிவில் சிசுக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக பொலிஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா். விசாரணையின் படி குறித்த பெண் செவிலியர் 07 சிசுக்களை […]

தைவான் சுதந்திரம் கோரும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை -சீனா

தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன. எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் ராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இதனை, […]

நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம் – விபத்து

மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார். நெடுஞ்சாலையில் இறங்கியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் […]

கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை […]

அனுபவம் வாய்ந்த பைலட் மறைவு – விமான நிறுவனம் இரங்கல்

மியாமியில் இருந்து சிலி நோக்கி 271 பயணிகளுடன் லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாத்ரூமுக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து விமானம் உடனடியாக பனாமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பைலட்டை பரிசோதனை செய்தனர். அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் […]

சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த ஹவாய்……

அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகியுள்ளன. குறித்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்த ஹவாய் தீவு இன்று காட்டுத்தீயினால் உருக்குலைந்துபோயுள்ளது.