பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சி தொல்லை

அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் , ரயில்களுக்குள் மோப்ப நாய்கள் அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருகின்றதாக கூறப்படுகின்றது . மோப்ப நாய்கள் மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடிக்க உதவும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சு கூறியது. பாரிஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக அண்மையில் புகார்கள் வந்தன. எனினும் இதுவரை ஒரு மூட்டைப்பூச்சியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறிய அமைச்சு மோப்ப நாய்களைக் கொண்டு பூச்சிகளைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கமுடியும் என தெரிவித்துள்ளது. அதோடு மூட்டைப்பூச்சிகள் உள்ளனவா என்று இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை […]

புடின் தனக்குதானே கொடுத்துக்கொள்ளும் பிறந்தநாள் பரிசு – அணு ஏவுகணை

ரஷ்ய மக்களுக்கு மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சைரன்கள் ஒலிப்பது வழமையாக இருந்து வருகிறது. எனினும், இன்று வழமைக்கு மாறாக காலை 10.30 மணியளவில் திடீரென நாடளாவிய ரீதியில் ஒலித்தன. சைரன் ஒலி எழுப்பிய நிலையில் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் மக்களை 3ஆம் உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கும் அறிவிப்பு […]

இத்தாலியில் சுற்றுலா பேருந்தில் தீ – 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில் மார்கெரா மாவட்டத்தில் உள்ள தங்களது முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 7.30 மணியளவில் மேஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலம் ஒன்றின் மீது வந்துகொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே […]

இலங்கை மாணவியை வெளியேறுமாறு அறிவித்த பிரான்ஸ்

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற இலங்கை மாணவியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ கூறுகையில், இலங்கையில் தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ்சிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். வழக்கமான கல்வித் திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பாக பிரென்ஞ் மொழி பேசாத மாணவர்களின் வகுப்பில் இணைந்து மொழி கற்கைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். தான் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் போர்டேக்ஸ் நகரில் வசித்ததுடன், […]

கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுவதற்கு அதிகாரிகள் ஆடுகளை பயன்படுத்தும் முறையை மேற்கொண்டு வருகின்றனர். 1980ம் ஆண்டில் இருந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் யுக்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில், எளிதில் பற்றும் நிலையில் உள்ள புதர்களையும், தாவரங்களையும் இந்த ஆட்டுமந்தைகள் மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலி

ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் நகரில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டலயாஸ் பகுதியில் உள்ள பிரபலமான டீட்டர் இரவு விடுதியில் சுமார் 06:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்கள் பகிரப்பட்ட காணொளியில், கட்டிடத்தின் மேலே தீப்பிழம்புகள் எரிவதையும், அதன் பெரிய ஜன்னல்களில் இருந்து அடர்ந்த, இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது. காணாமல்போன மற்றும் அந்தவேளை வளாகத்தில் இருந்தவர்களை அவசர சேவைகளில் […]

பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி ! 30 பேர் காயம்!

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  – 3 பேர் பலியானதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசியில்  இருந்து பேருந்தில்  54 சுற்றுலா பயணிகள் ஊட்டி சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ழது விபத்து காரணமாக அப்பகுதியில் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு ! இயல்புவாழ்க்கை முடக்கம்:

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் முழு ஆதரவு கிடைத்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தினர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கர்நாடகாவில் செப்டம்பர் 29ம் தேதி மாநில முழு […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 […]

அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்!

அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்! – என்ன நடந்தது? கணேசன், காவலர் சீருடையில் அண்ணாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அண்ணாமலையின் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிரப்பட்டது ‘ என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பா‌.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டுவருகிறார். கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகைதந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அன்றைய […]