மகாராஷ்டிராவில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து

இந்தியாவின் மகாராஷ்டிரா – அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் தொடருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பாரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. குறித்த தொடருந்து அஷ்தி தொடருந்து நிலையத்திலிருந்து அகமதுநகர் தொடருந்து நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரையில் எந்த தகவலும் […]

அமெரிக்காவில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா – டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர். இதன்போது, மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்து அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் […]

ஹமாஸை அழிப்பதுதான் ஒரே வழி – இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு,” என்று கூறினார். ஆனால், “தீவிரவாதிகளை” அகற்றுவது “மிகவும் அவசியமானது” என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று […]

கொத்மலையில் நிலத்துக்கு அடியே சத்தம்! மக்கள் அச்சம்!

   ( நூரளை பி.எஸ். சுப்பிரமணியம்) நுவரெலயா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போலும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள தகவலுக்கு அமைய நேற்று  ( 15) ஞாயிற்றுக்கிழமை முதல் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து […]

ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    (க.கிஷாந்தன்) ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது.   இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அட்டன் […]

மன்னார் தென் கடலில் அதிகளவில் ஆமைகள் மரணம்!

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் தென் கடற் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகையும் தந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென் கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் சிலாவத்துறை […]

ஹப்புத்தளை – தியாத்தலாவைதில் ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து தாமதம்!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே தடம் புரண்டதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கண்டியில் இருந்து […]

தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்ப முடியாது. – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ” மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குக்காக மட்டும் தானே எவரையாவது அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள், தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள் எனவும் அவர் கூறினார். […]

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

  யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்ற பொதுவானதாக இருந்து வருகின்ற நிலையில் வற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினையே கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். குறித்த விவகாரம் அமைச்சரின் கவன்திற்கு […]

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர். இவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.