ஜெர்மனிய திரைப்பட போட்டியில் சாதித்த இலங்கை இளைஞன்…

ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட்  பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு…. ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய […]

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு கொழும்பில்

இலங்கையின் இரண்டாவது பொருளாதார உச்சி மாநாடு அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் போது பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சரியான தலைமைத்துவம் இல்லாமையால் தொடர்ந்து பின் தள்ளப்படுகின்றது. அருட்பணி எஸ்.மாக்கஸ்

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையாலேயே இன்று மன்னார் தொடர்ந்து பின் தங்கி காணப்படுவதுடன் பல திட்டங்கள் தோல்வியிலும் அழிந்தும் செல்லுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். -உண்மை மற்றும் நல்லிணக்க சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளுடனும் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி […]

ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பேசாலையில் பெருவிழா!

(வாஸ் கூஞ்ஞ) கருவாகி , உருவாகி , குருவாகி , திருவாகி  நின்று அகவிருள் அகற்றி . அறிவொளியூட்டி , நல்நெறி காட்டி நிற்கும் ஆசிரியப் பெருந்தகைகளை நினைத்து மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆசிரியர் தினம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பேசாலை மன் சென். மேரிஸ் வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (17) ஆசிரியர் தினமும் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவும் மிகவும் சிறப்பாக பெற்றோர்களால் நடாத்தப்பட்டது. (வாஸ் கூஞ்ஞ)

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சலீம் நியமனம்!

நூருல் ஹுதா உமர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக சாய்ந்தமருதை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் மறுசீரமைப்பு சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்காக மேற்படி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அல்ஹாஜ் ஏ.எல்.எம். சலீம் கடந்த காலங்களில் இலங்கை பொது சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகவும், அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும் பதவி […]

மட்டு மாநகரில் அமையவுள்ள நவீன நூலகத்திற்கான திட்டசெயல்படுத்தல் குழு நியமனம்.

  மட்டக்களப்பு மாநகரத்தில் அமையவுள்ள மாபெரும் நவீன நூலகத்திற்கான புத்தகங்கள், ஆவண பதிவேடுகள், ஏட்டுச் சுவடிகள், பண்பாட்டு மரபுரிமை சாதனங்கள் போன்றவற்றையும் ஏனைய முக்கிய தேவையான விடயங்களையும் தேடி சேகரித்து ஒழுங்குபடுத்துவதற்கான திட்ட செயல்படுத்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தற்போதய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சருமான  சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக செயல்பட்ட போது அரசியல், இனம், மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்து எமது மாகாணத்தில் விசேடமாக […]

மன்னார் தென் கடலில் அதிகளவில் ஆமைகள் மரணம்!

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் தென் கடற் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்து வருகின்றனர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகையும் தந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென் கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் சிலாவத்துறை […]

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

  யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்ற பொதுவானதாக இருந்து வருகின்ற நிலையில் வற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினையே கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். குறித்த விவகாரம் அமைச்சரின் கவன்திற்கு […]

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் இலங்கையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர். ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த முயற்சித்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டர். இவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்துமடு விவகாரம்; உடனடியாக தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு !

நூருல் ஹுதா உமர் மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், மகாவலி பணிப்பாளர் , பொலிஸ்மா அதிபர் மற்றும் வனவிலங்கு […]