பாதுகாப்பு கோரி பொலிஸாருக்கு கடிதம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவலிங்கம் பி்ரதிஸ்டை செய்யப்படவுள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆட்சேபம் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்ககோரி பொலிஸாருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிரமதான ததில் ஈஈடுபட்ட மூவர் பொலிஸாரால் விசாரணைக்காகவும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதிசிவன் வளாகத்தில் தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை சிலைகளை சேதப்படுத்தியோர் கைது செய்யப்படவில்லை. […]

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு இலவச அரிசி வழங்கி வைக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2022ஃ2023 ஆண்டுக்கான பெரும்போக நெல்லை அரசு விலைக்கு பெற்றுக்கொள்வது மற்றும் நெல்லை பகிர்ந்தளிக்கும் வேலைதிட்டத்தின் கீழ் இ.தொ.கா  பொது செயலாளரும் , நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட  இஞ்சஷ்ரிஇடில்லரிஇ ஓல்டன்இ ட்ரஷ்பிஇமாநெலிஇப்ரன்லோஇமஸ்கெலியா ஆகிய கிராம சேவகர்  பிரிவில் உள்ள 3,750  க்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு  இலவச அரிசி வழங்கல் நிகழ்வு இ.தொ.கா வின் தவிசாளரும் […]

மலையக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இந்திய அரசு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளது படிப்பிற்கான உதவித்தொகையை நீடித்து வருகின்றது. இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் உயர்தரம், இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 6 திறமைச் சித்திகளுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்கள் அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய 25 வயதுக்கு குறைவானவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை இந்திய உயர் […]

இரண்டு உயிர்களை பலிகொண்ட வாகன பேரணி

பதுளையில் பாடசாலை கிரிக்கட் போட்டிக்காக இடம்பெற்ற வாகன பேரணியின் போது ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் (01) உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 08 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். பதுளையில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கிடையிலான பாடசாலை கிரிக்கட் சுற்றுப்போட்டி இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருந்தது. போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட வாகன பேரணியில் பயணித்த ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த […]

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை இன்று (01) முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மா விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் புதிய விலையில் பால் மாவை சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் உயிரிழப்பு

தலவாக்கலை – லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தேயிலை தோட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தவர்களே இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது, 72 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலமும் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கை

டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற “DIGIECON 2030” வெளியீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை தொழில்நுட்ப அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் […]

தோட்ட பகுதிகளுக்கும் நிவாரணங்கள் வேண்டும்

நிவாரணம் வழங்கலில் பாராபட்சம் காட்ட வேண்டாம். மலையக தோட்ட பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். “நாட்டின் பொருளாதார நிலையிலே சிறியதொரு மேம்பாட்டை காணமுடிகின்றது. எனினும், கடந்த இரண்டு – மூன்றாண்டு கால பகுதியில் ஏற்பட்ட பின்னடைவு உடனடியாக மாற்றமடையப்போவதில்லை. சந்தையில் பொருட்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றின் விலைகள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே […]

“இதுவே கடைசி சந்தர்ப்பம்”

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச […]

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி…

தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற […]