குறைக்க முடியாது

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. தமக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவு போதுமானதாக இல்லை என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார். 42 மற்றும் 59 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை, கிடைக்கும் எரிபொருள் கோட்டாவின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச எரிபொருளாக வேன்களுக்கு 40 லிட்டரும் பஸ்களுக்கு 100 […]

இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம்?

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாமை குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம் என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேயிலை உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலை குறைந்துள்ளது

மரக்கறி, தேங்காய், தேயிலை, கறுவா உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளது என்று கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளார். நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு அரசாங்கத்தின் உரத் திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், ஏனைய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள் கிடைக்காதமை தொடர்பில் விவசாயிகள் விவசாய அமைச்சுக்கு தொடர்ந்து முறைப்பாடு செய்து வருகின்றனர். அந்த விடயங்களை கருத்தில் […]

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், குறித்த காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசனங்களை முற்பதிவு செய்யக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் தொண்டமான் கோரிக்கை

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையான அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு ஆலோசனை

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒரு லீற்றர் டீசலின் விலை 80 ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைவடைய உள்ளதுடன், புதிய பஸ் கட்டணம் அமல்படுத்தப்படும். மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் குறைப்பு தொடர்பான விரிவான தகவல்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விரைவில் அறிவிக்கப்பட […]

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கொழும்பில் ஆரம்பமாகின. இதன் ஊடாக பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தாய்லாந்து சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துகொள்வது மாத்திரமின்றி, அந்த பொருளாதாரச் சந்தையினூடாக ஏனைய ஆசியான் நாடுகளின் பொருளாதார சந்தைகளுக்கான பிரவேசத்தை அதிகரித்துக்கொள்ளதுடன் தற்போது […]

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாறுமாம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் […]

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு, போனஸ் கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது, அது வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இ.தொ.காவின் […]