புதிய சீர்திருத்த திட்டங்களில் கவனம் செலுத்துவது முக்கியம் (Photos)

நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னணியை இலங்கை […]

மேலும் வலுவடையும் நட்பு…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துதல், இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவுக்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இந்திய ரூபாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் […]

அமைச்சரவை வழங்கிய அனுமதி

நாவலப்பிட்டி – பஸ்பாகே கோறளை, ஹைன்போர்ட்  தோட்டக் காணியை வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கண்டி – நாவலப்பிட்டி, பஸ்பாகே கோறளையிலுள்ள 566 ஏக்கர்களுடன் கூடிய ஹைன்போர்ட்  தோட்டக் காணி, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கருத்திற்கொண்டு, குறித்த காணியில் 200 ஏக்கர் காணியை வௌ்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய ஆபத்தான இடங்களில் வசிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் […]

IMF கடன் வசதி குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் வசதியை பயன்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குறித்து இன்று ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இனி இலங்கையால் முன்னோக்கி செல்ல முடியும்.

எதிரணிகளின் அரசியல் விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கலை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கைக்கு கடன் வசதி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” வங்குரோத்து நிலையை அடைந்த […]

இலங்கை வங்குரோத்தான நாடல்ல…

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) […]

ரணில் விக்ரமசிங்ஹவே நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர்: சச்சுதானந்தன்

நீலமேகம் பிரசாந்த் நாடு பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து உலக நாடுகளின் அனுதாபத்துக்கு உட்பட்ட நம் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுத்த நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியம் 7 பில்லியன் ரூபா நிதி வழங்க அனுமதி கிடைத்துள்ளமை ரணிலின் அனுபவமிக்க தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி.ரணில் விக்ரமசிங்ஹ ஒருவரினாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில் நாடு […]

IMF எடுத்துள்ள தீர்மானம்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர். இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் […]

IMF – கடன் வசதி

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. இந்த மாத தொடக்கத்தில், […]

முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகள்

வெலிமட – அம்பகஸ்தோவ, கொடலிட பிரதேசத்தில் முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகளை அடகு வைத்து அவற்றை இரகசியமாக  திருடிச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பில் வெலிமட மொரகொல்ல பலகல பிரதேசத்தில் வசிக்கும் மூவரை அம்பகஸ்தோவ பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.