வருடாந்த செயல்திறன் நிகழ்வு

கொட்டக்கலையில் இயங்கி வரும் எம்.எஸ் சர்வதேச பாடசாலையின் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருடார்ந்த செயல்திறன் நிகழ்ச்சிகள் கொட்டகலையில் எம்.எஸ்.முத்துக்கருப்பன் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி திறனையும், மாணவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டும் விதமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பத்தனை ஸ்ரீபாத கல்லூரியின் உப பீடாதிபதி அன்டனி மெத்திவ்,தலவாக்கலை புனித பத்திரிசியார் பாடசாலை அதிபர் வணக்கத்துக்குறிய பிதா டொம்னிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு பாடசாலையின் மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து […]

“நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணி (படங்கள்))

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144ஆவது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா இன்று (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார். இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல […]

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சித்திரை புத்தாண்டுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF

IFM அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள இணக்கப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளது. கேகாலையில் வைத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இதனை கூறியுள்ளாலர். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க் கட்சிகள் அடங்களாக மாற்று கருத்துடையோரின் நிலைப்பாடுகளும் வெளிப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்துக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டப் பிரிவில் பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பல வருடகாலமாக மூடிய நிலையில் காணப்பட்ட இத் தொழிற்சாலையானது, தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில்,  பின்னர் பார்க் தோட்ட முகாமைத்துவம் அதனை பொறுப்பேற்றது. அங்கு கழிவு தேயிலை அறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று (18.03.2023) அதிகாலை தொழிற்சாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டு, தீ கொளுந்துவிட்டு […]

சந்ரிக்காவின் நிலைப்பாடு

நலலாட்சியில் குற்றங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸாரும் துஷ்பிரயோகர்களாக மாறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.    

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு  வாய்ப்பு வழங்க வேண்டும் – ராஜ் அசோக் தெரிவிப்பு.

மின் பட்டியலை உரிய நேரத்தில் குறிப்பிட்ட திகதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே சமயத்தில் பெருந்தோட்ட பகுதிகளிவ் மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். காரணம் வறுமானத்தில் குறைந்து நிற்கும் சமூகமாக இருப்பதால் இவ்வாறனதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் சபையில் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இக்கோரிகையில்  மின் கட்டணம் அதிகரிப்பினால் பெரும்பாலும் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட திகதிக்கு மின் பட்டியல்  வழங்க முடியாமல் போனால் […]

மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி

மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (17)கைச்சாத்திடப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது. இதன்படி மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி வழங்கப்படவுள்ளது. புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் […]

“சதராவ தீபனீ” கௌரவிப்பு நிகழ்வு (Photos))

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்தியலுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட “சதராவ தீபனீ” என்ற கௌரவிப்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றது. கலைப் படைப்புகளுக்குப் பங்களித்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், தர்மசிறி பண்டாரநாயக்க, பராக்கிரம நிரியெல்ல, சிரில் விக்கிரமகே ஆகிய சிரேஷ்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, குமார திரிமாதுர, […]

New Zealand Vs Slc 2nd Test

இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. நாளைய போட்டியில் நிரோஷன் டிக்வெல்லவுக்கு பதிலாக இளம் வீரர் நிஷான் மதுஷ்க இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.