ஏமாற்று வேலை வேண்டாம்

தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதை சிலர் இந்தியாவுடன் இணைந்து கொண்டாட முயற்சிப்பதாக தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிலையத்தின் இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் இதனை தெரிவித்துள்ளார். மார்ச் 22 ஆம் திகதியை கொண்டாட சிலர் துடிப்பது அர்த்தமில்லாத ஒன்று என அவர் கூறியுள்ளார். காரணம் தோட்ட தொழிலாளர்கள் எப்படி வந்தார்களோ இன்றும் அவர்கள் அப்படியே வாழ்கின்றமை கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வெறும் விளம்பரத்துக்காக எதையும் […]

சந்திப்பு

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு செயலமர்வு ஒன்றில் கலந்துக் கொள்ள சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதன்போது இரு நாடுகளுசக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 E – Bike

உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் சீகிரியாவை பார்வையிட வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுலா பயணிகளின் நன்மைக் கருதி சீகிரியா நகரை மையப்படுத்திமுன்னெடுக்கப்படுவதாக எமது செய்  E – Bike சேவை தியாளர் கூறினார். இந்த சேவை மகிழ்சியானது எனவும் இலங்கை மக்களுக்கு உதவியாக அமையும் எனவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம்?

லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது என லிட்ரோ தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பயனை மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கச்சதீவு திருவிழா (Photos navy.lk)

கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது. யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது. திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்று, 6.30 ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இன்றைய திருவிழா திருப்பலி கொழும்பு […]

G.Lக்கு பதிலாக?

பேராசிரியர் ஜி.எல் பீரிசை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி  சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த பதவிக்கு பொருத்தமான பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் […]

மன்னாரில் அரச காணியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்- தடுத்து நிறுத்த சென்ற அரச அதிகாரிகளுக்கு மிரட்டல்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் மணல் அகழ்வை நிறுத்துவதற்காக நேற்று (3) சென்ற நிலையில் மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரும் குறித்த மணல் அகழ்வை மேற்கொள்ளும் நபரால் ஆபாச வார்தைகளால் […]

நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் போராட்டத்தில்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் […]

சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (03) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே, அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். சிறார்களை […]

நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி

நுவரெலியா – நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பஸ்ஸொன்று நானுஓயா, ரதல்ல – குறுக்கு வீதி பகுதியில் வைத்து வேன் மற்றும் ஆட்டோவை மோதித் தள்ளியதில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநரும் உயிரிழந்தனர். வேனில் பயணித்தவர்களில் […]