IMF – தீர்மானமிக்க கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் சீனப் பிரதமருடன் […]

திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை(Photos)

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று (03) முற்பகல் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். […]

கொட்டகலையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

சித்திரை வருடப்பிறப்பையொட்டி இம்மாதம் விசேட அதிரடி பரிசோதனை கொட்டகலை நகரத்தில் கொட்டகலை சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹோட்டல்கள்இபலசரக்கு மலிகை பொருட்கள் விற்பனை நிலையங்கள் உட்பட உணவு பொருட்கள் விற்கும் நிலையங்களில் தீவிர பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாவனைக்கு உட்படாத உணவு பொருட்கள்இகாலாவதியான உணவு பொருட்கள் உட்பட உணவு பாதுகாப்புக்கு முரணாண உணவு பொருட்களை விற்ற விற்பனையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல உணவு பொருட்களை கொட்டகலை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியமை […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியது. எனினும், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி […]

தலைமன்னார் கடற்கரையில் காத்திருந்த மக்கள்

தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து இன்று (3)  காலை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதற்கு தயாராக இருந்த போதிலும் உரிய நேரத்துக்கு கடற்படை மக்களை பயணிக்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நீண்ட நேரம் தலைமன்னார்  கடல் கரை  பகுதியில் மக்கள் இன்று (03) காலை முதல் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயோதிபர்கள் என பலர் காத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.  கடற்படையினரின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக உரிய ஆவணங்களை காலையில் சமர்ப்பித்த போதும் அந்த […]

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்ல (Photos)

மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி. பொருளாதார வீழ்ச்சியின் ஊடாகவும் நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் என்றும், எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பைப் போன்று, பொருளாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (03) முற்பகல் […]

சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள்

புரட்டொப் பகுதியில் பிரதான ஐந்து தோட்டங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறுமான மருதப்பாண்டி ராமேஸ்வரன்  ஆலோசனைக்கு அமைய கொத்மலை பிரதேச சபை புரட்டொப்ட் வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்தியின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அயரி,தொழிச்சாலைப்பிரிவு,பூச்சிகொடை,புரட்டொப்ட், ரஸ்புரூக் போன்ற தோட்டங்களுக்கான சூரிய சக்தியில் இயங்கும் வீதி விளக்குகள்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொத்மலை மற்றும் புஸ்ஸல்லாவ […]

Kachchathiv festivals today and tomorrow

இலங்கை – இந்திய பக்தர்களின் பங்களிப்புடன் கச்சை தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை நிறைவடைய உள்ளது. இந்த முறை இந்திய பக்தர்கள் சுமார் 1000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். எனவே இலங்கை – இந்திய பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை பக்தர்களுக்காக குறிக்கட்டுவானில் இருந்து விசேட படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

புதிய வரி சீர்திருத்தம்-IMF

ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கிளை இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையிலேயே வரித்திருத்தம் அமையப்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளையின் சிரேஷ்ட பிரதானி Peter Breuer, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கிளையின் தலைமை அதிகாரி Masahiro Nozaki ஆகியோர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை விடுத்துள்ளனர். அரசாங்கத்தின் […]

அடுத்த 5 ஆண்டு இலக்கு…(Photos)

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், ஒன்றிணைக்கப்படும் டிராக்டர்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் […]