மலையக சிறுவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.லெட்சுமனார் சஞ்சய்

உலக வங்கியின் ஊடாக மலையக பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் சிறார்களுக்கு போஷாக்கான சத்துணவு வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை படம் பிடித்து விளம்பரம் தேடிக்கொள்வதும் மலையக சிறார்களை போஷாக்கத்தரிப்பது எம் சமூகத்தை நாமே இழிவுபடுத்துவது போல காணப்படுவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில் உலக வங்கியின் நிதியொதுக்கிட்டின் கீழ் மலையகத்தில் காணப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் காணப்படும் 23000 சிறார்களை இழக்கு வைத்து […]

இந்திய மீனவர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை அண்மையில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது […]

ஜனாதிபதி பணிப்பு (Photos)

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை வழங்கினார். முதலீட்டு ஊக்குவிப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 2023 வரவு […]

தொழிற்சங்க போராட்டம் தோல்வி:

நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார். (நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தது. இதனை ஐ.ம.சக்தி, முன்னிலை சோசலிச கட்சி ஆகியன இணைநதே இதனை செய்தனர். அதாவது சுகாதார துறையில் 5 வீதமானோர் சரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படவில்லை. போக்குவரத்து துறையும் தபால் துறையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டதாக அறியேன். ஒன்றாய் சேர்ந்து போராடுவோம் என்றவர்களுக்கு இணைந்து செயற்பட […]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும்

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், […]

FIFA

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர். முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார். உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா குமாரி மற்றும் சமன் தில்ஹான் நாகஹவத்த ஆகியோரும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் டி.சுதாகரும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் […]

மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு- அநுர

100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஓட மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமில்லை எனவும் மாறாக மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு எனவும் அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தேர்தலை பிற் போடுவதால் வீட்டுக்கு சென்று தூங்குவார்கள் என்று ஜனாதிபதி எண்ணினால் அது அவரின் பரிதாப நிலை எனவும் அவர் விமர்சித்தார்.

நாட்டில் உணவு தட்டுப்பாட்டு வீதம் குறைவடைந்துள்ளது – அமைச்சர் ஜீவன்

மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இலவசமாக சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று  (01.03.2023) […]

ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை இன்று (013) மேற்கொள்கின்றார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நாளை (02) நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கின்றார். இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை அமைச்சர் இந்தியாவில் தங்கவுள்ளார். இந்த இலங்கை குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் […]

மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க் கட்சிகள்- கல்வி இராஜாங்க அமைச்சர்

எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியப்போகிறது. எனவே இவ்விடயத்தில் நாட்டு மக்கள் தெளிவடைய வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோக நிகழ்வானது கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தஇ கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் இலங்கைக்கான சீனத் […]