பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை (solar panels) வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். […]

கிரகரி வாவியில் சடலம்

நுவரெலியா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியில் இன்று (16) மாலை 03.00 மணியளவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. ருப்பதன் காரணமாக ஆணா அல்லது பெண்ணா என பொலிஸாமீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சடலம் உருக்குலைந்த நிலையில் இர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக […]

பஸ் விபத்து – நால்வர் காயம்

இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கினிகத்தேன, பெரகஹமுல பகுதியில் வைத்தே பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்த பயணித்த இ.போ.ச. பஸ், பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வேளையில் […]

சிங்கள தலைமைத்துவத்தை பாதுகாத்து தந்த தமிழ்த் தலைவர்கள் (Video)

வரலாற்றில் சிங்களத் தலைமைத்துவத்தை பாதுகாத்துத் தந்த தமிழ்த் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் நினைவுபடுத்தியிருந்தார். தமிழ்த் தலைவர்கள், சிங்களத் தலைமைத்துவத்தை உருவாக்கவும், இலங்கையை உருவாக்கவும் பாடுபட்டதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, தமிழ் – சிங்கள கலாசாரத்தை வேறுபிரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். யாழ் கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ”வெசாக் தினத்தை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்திய பொன்னம்பலம் ராமநாதன் அவர்களுக்கு நன்றி […]

மலையக வீடமைப்பு திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்,  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மூவர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், நீர்வழங்கல் மற்றும் தோட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்,  திட்டமிடல் பிரிவு அதிகாரிகள்,  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர், புதிய கிராமங்கள் […]

உயிர் பயத்தில் மாணவர்கள்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் உயிர் பயத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாக குறித்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது பழமையான வரலாற்றை கொண்ட கவரவில ஆரம்ப பிரிவு பாடசாலை ஆரம்பத்தில் தொழிற்சாலையிலேயே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னரான காலங்களில் பாடசாலைகளில் புது கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையும் காணப்படுவதால் தரம் மூன்று மற்றும் சங்கீதஇநடன வகுப்புக்கள் குறித்த பாழடைந்த தொழிற்சாலைகளிலேயே இடம்பெற்று வருவதாகவும் […]

இந்த மாதத்தில் இதுவரை 3,637 டெங்கு நோயாளர்கள்

12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 3,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மகிழ்ச்சியான செய்தி

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும். ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும். ஒரு கிலோ சிவப்பு […]

ஐ ஜாலி…

இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக குறிப்பிட்டார். மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக 22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். […]

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கையில் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் இந்த குழு செயற்படுகிறது. இலங்கையின் நிர்மாணத்துறையின் பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, அதற்கு புத்துயிரளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். நிர்மாணத்துறைக்கு புத்துயிரளிக்கும் குழுவின் கீழ் […]