இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேன, பெரகஹமுல பகுதியில் வைத்தே பிற்பகல் 2 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்த பயணித்த இ.போ.ச. பஸ், பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வேளையில் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த மற்றுமொரு இ.போ.ச. பஸ், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸை, முந்திக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளது. இதன்போதே எதிர் திசையில் அட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதுண்டுள்ளது.
(அந்துவன்)