மலையக தமிழர்- பாஜக

இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான உங்கள் அவதானம் அதிகரிக்க வேண்டும் <பாஜக அமைச்சர் முருகன்,  அண்ணாமலை ஆகியோரிடம் மனோ தெரிவிப்பு> இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி  உங்கள் பாரதீய ஜனதா கட்சி. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும்  பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகிய நீங்கள் இருவரும்  உங்கள் […]

நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை: ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த […]

படகு கவிழ்ந்து விபத்து

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று பிற்பகல் சென்றிருந்தனர். இதன்போது, 3 மாணவர்களுடன் படகு ஒன்றில் பயணித்த சந்தர்ப்பத்தில், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த மாணவர்கள் நீரில் மூழ்கி […]

மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன்

” மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள […]

இலங்கையில் விமான சேவைக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவை

தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் பணியாற்ற வேண்டிய 56 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் பணியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\ உண்மையில் இலங்கையில் விமான சேவைக்கு குறைந்தது 138 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது 82 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் […]

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள்

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் […]

துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துருக்கியின் அதானா நகரிலுள்ள தேயிலை இறக்குமதியாளர் ஒருவர் தமது கையிருப்பில் இருந்த 12,000 கிலோகிராம் தேயிலையை துருக்கி […]

‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’

சுதந்திரம் இல்லாத வெறும் அபிமானம் மாத்திரம் கொண்டாடப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்யளார். ‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’ எனவும் கர்தினால் கூறினார். அனைவரும் பிரதிபலன்களை எதிர்பார்த்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் கைது

அட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11.02.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அட்டன் – கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகின்றார் என இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து […]

அகிம்சை என்பது இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் முக்கிய கோட்பாடு

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணமே நாட்டில் பொருளாதார ஸ்திரதன்மையற்ற நிலையை தோற்றுவித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் மூன்று பீடங்களினதும் நான்கு மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள் காட்டி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V.விக்னேஸ்வரன் மகாநாயக்க தேரர்களுக்கு பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன், அதில் பல விடயங்களை வலியுறுத்தியுள்ளார். அகிம்சை […]