திருடர்களை இனம் கண்டு தண்டனை வழங்க தயார்

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியால் அதனை செய்ய முடியும் என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (02) மாலை அம்பாறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கூறினார். மக்களின் சொத்துகளை திருடியதும், வீண்விரயமாக்கியதுமே இன்றையே முக்கிய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு  கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர். தபால் திணைக்களத்தின் பாரம்பரிய […]

ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி […]

11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும்

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர். ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான பெயர் விவரங்கள் கீழ்வருமாறு- 1. […]

சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, நாளை (பெப்ரவரி 03 ஆம் திகதி) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய […]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா மீண்டும் இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த நான்காம் அகில கால மீளாய்வின் போது இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை நாளைய தினம் ஜெனீவா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு, கோவிட் […]

விடுவிக்கப்படவுள்ளன இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள்

பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் நாளைய தினம் (03.02.2023) இராணுவத்தினரால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன. யாழ். வலி – வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளன. பல்லாண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகளை 2019ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ். மாவட்டத்தை […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியம்

மார்ச் மாதத்தில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது, உள்ளூராட்சி மன்ற […]

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே

இது போராட்டத்தின் மற்றுமொரு ஆரம்பம் என பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.02.2023) பிணையில் விடுதலையான வசந்த முதலிகே, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது, இந்த நாட்டில் தொழிற்சங்க கூட்டணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் பலர் ஒன்றாக இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக இந்த குண்டர் அரசாங்கம் மக்களின் அதிகாரத்திற்கு […]