மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி (Photos)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார். மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்ததோடு மல்வத்து மகாநாயக்க வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்கு விசேட […]

ரதெல்ல விபத்து- Update

நானுஓயா – ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹொரண குடுஉதுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்​ை கடந்த வெள்ளிக்கிழமை […]

சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் – முதல்-அமைச்சர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்,இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா […]

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (01) இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் […]

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. இதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி ஒக்டேன் 92 பெற்றோல் […]

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கடந்த இரு தினங்கள் மேலதிக நீர் […]

U.S. – Victoria Nuland

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க*க்கும், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்டிற்கும் (Victoria Nuland) இடையிலான கலந்துரையாடல் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். இதன் போது, இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா […]

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன்

இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது. பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை அடிப்டையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்தியாவின் […]

4 புதிய கலப்பின அந்தூரியம் அறிமுகம்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மாகந்துறை விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சென்று அதன் ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார். குளியாபிட்டிய மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 44 புதிய கலப்பின அந்தூரியம் இனங்களையும் இரண்டு அன்னாசி வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 44 அந்தூரியம் இனங்களுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு அந்தூரியம் இனங்களுக்கு லங்கா பியூட்டி மற்றும் லங்கா குமாரி என பெயரிடப்பட்டுள்ளதாக மாகந்துர விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்னாசி வகைகளுக்கு இன்னும் […]

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 3250 அதிதிகள்

75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 3250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் உள்ளடங்குகின்றனர். அதிக பணம் செலவழித்து இந்த நிகழ்வை […]