ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால்……?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரிகளைச் சுமத்தி, ராஜபக்சர்கள் திருடிய பணத்தை அறவிட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (31.01.2023) இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும், தொலைநோக்குப் பார்வையும் தேவைப்பட்டாலும் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி […]

O/L Exam

பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை (O/L) தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வுக் கலந்துரையாடல்

“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல்  ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோகக் […]

கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை

மலையக மக்கள் நாட்டிற்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு  இலங்கை திருச்சபை, மெதடிஸ்ட் திருச்சபை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம்  பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பாகுபாடுகளை அகற்றுமாறு  இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையில் பல இன, பல மதங்களைக் கொண்ட இலங்கையின் சமமான குடிமக்களாக மலைய […]

அரசாங்கத்தின் வருமானம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள் மற்றும் கடன் கொடுப்பனவுகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துச் செலவுகளையும் தற்போது திறைசேரிக்கு ஏற்பது கடினம் எனவும் ஜனாதிபதி மேலும் […]

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி – 4 ஆண்டுகள் சிறை தண்டனை

அம்பத்தூர் அடுத்த பாடி சீனிவாசா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மனைவி சுலோச்சனா . கலைச்செல்வன் ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள பொதிகை நகரில் 1,500 சதுர அடி இடத்தை சுலோச்சனா பெயரில் கிரையம் செய்து அதற்காக பட்டா மாறுதல் பெற வேண்டி பொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி என்பவரிடம் மனு கொடுத்தார். அதற்கு கந்தசாமி, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி சுலோச்சனா சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் […]

மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு

மழையே, வெள்ளமோ ஏற்படும் முன், தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்தும் என்று உறுதியேற்று, மிகப்பெரிய சாதனைகளை அரசு செய்துள்ளது. கடந்த மழை – இந்த மழையை ஒப்பிட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் உரையாற்றுகிறேன். அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. இதில் கொரோனாவை எதிர்கொண்டு வென்றோம், மழை வெள்ளத்தில் மக்களைக் காத்தோம் என்ற இரண்டு சாதனைகளை படைத்துள்ளோம். அரசு பாராட்டு […]

உடல்நிலையை கண்டறியாமல் கொடுக்கப்படும் மருந்துகளால், பல்வேறு சிக்கல்கள்

விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோய்த்தொற்றுக்கள் இரண்டும் அதிகரித்து வருவதால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார். எனவே இரத்தப் பரிசோதனையின் மூலம் இவ்விரு நோய்களையும் தனித்தனியாகக் கண்டறிந்து மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். டெங்கு மற்றும் இன்புளுவென்சா ஆகிய இரண்டின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான வளர்ச்சியைக் காட்டுகின்றன என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் நோயாளியின் உடல்நிலையை கண்டறியாமல் […]

புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கிய பொதி

இலங்கையை சுற்றிவருவதற்காக நடைபயணம் ஒன்றை ஆரம்பித்த மாத்தறை – தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கிலேயே இந்த நடைபயணத்தை கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பை சென்றடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இலங்கையின் வரைபடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன், அந்த நடைபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்படும் ஆயிரம் […]

இலங்கையின் சுதந்திர தினம் – கரிநாள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஷ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார், எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல. அது கரிநாள் என […]