நாட்டுக்கு வீரர்கள் அவசியமில்லை – சஜித்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் பட்சத்தில் உறுப்;பினர்கள் புதிய வகை ஒழுக்க விதிகளை கடைபிடிக்க வேண்டி வரும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு அமைய அவர்களின் பதவி பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். தற்போது நாட்டுக்கு வீரர்கள் அவசியமில்லை எனவும் மாறாக மக்களின் கஷ்டங்களை அறித்த ஒருவரே அவசியம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை […]

60 வயதை பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

திருவள்ளூர் நகரின் மைய பகுதியான உழவர் சந்தையில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்துகொண்டு டிராக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் திருவள்ளூர் […]

மும்பை தாதர் 44 மாடி கொண்ட குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

மும்பை தாதர் பகுதியில் ஆர்.ஏ. ரெசிடன்சி என்ற 44 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 42-வது மாடியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 16 வாகனங்களில் விரைந்து வந்தனர். கட்டிடத்தின் 42-வது மாடிக்கு சென்று வீரர்கள் நடத்திய ஆய்வில் மூடப்பட்டு கிடந்த வீட்டில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 90 மீட்டர் உயர […]

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக போராட்டம்

தற்போதைய அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா வங்கி ஊழியர் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டி அணிந்து நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் நேற்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கத்தினால் கடந்த (23) ஆரம்பிக்கப்பட்ட கறுப்பு வாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் கறுப்பு உடை அணிந்து காணப்பட்டனர்.

மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்

க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) நடைபெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்சார வினியோகத்தை துண்டிக்க வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார சபைக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றும் 331,709 பேரின் மனித உரிமைகளை பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். எனவே குறித்த காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு இலங்கை மின்சார சபையே […]

ஜனாதிபதி

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும், இல்லையெனில், பாராளுமன்றத்திற்கூடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் […]

ஜனாதிபதிக்கு விசேட கடிதம்

மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் அமைந்துள்ள தனித்துவமான வரலாற்று பௌத்த விகாரைகளின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Imf

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதிலும் கடினமான காலங்களில் வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதிலும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரண சலுகைக்காக இலங்கை நிறைவேற்ற வேண்டிய அனைத்து விடயங்களையும் நிறைவேற்றியுள்ளதாகவும் கடன் வழங்கும் பிரதான நாடுகளின் இறுதிச் சான்றிதழின் பின்னர் அது தொடர்பான […]

மனிதக் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை […]

ஹிருணிகா பிரேமசந்ர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூச்சி உளளவரை தேர்தலை பிற்போடவே முயற்சிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி தனது இறுதி துரும்பு சீட்டை பாவித்து தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே மக்கள் பலமே இறுதியில் வெல்லும், எனவே மக்கள் தேர்ல் ஒன்றை கேட்டு போராட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.