நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24)  கையெழுத்துப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில்  “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

நிபுணர் குழு

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுப்படும் வாகன் தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழுமை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்படும் முறைமை குறித்து இந்த குழு ஆராயும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்

பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவின்படி முன்னெடுக்கப்படும் ‘ தேசிய இளைஞர் தளம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை […]

ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை – அமைச்சர் ஜீவன்

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (24)  நடைபெற்றது. இதன்போது தேர்தலுக்கான நிதி, பிரச்சாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இச்சந்திப்பின் பிறகு ஊடகங்களிடம் கருத்து […]

வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

 நாட்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து கொள்வனவு, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கடந்த […]

பொது பயன்பாட்டு ஆணைக்குழு

நாளை (24) 2 மணி நேரம் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் 40 நிமிடங்கள் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு எரிவாயு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹிந்த அமரவீர

ஒரு சிலர் இரசாயன உரம் தொடர்பில் மீண்டும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துதுள்ளார். அதாவது சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்புகளை நடத்தி ஒரு சிலர் இவ்வாறு சூழ்ச்சியான முறையில் செயற்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.        

ஜனாதிபதி ரணில்

இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.