பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கை

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வேட்பாளர்களுக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா வலியுறுத்தியுள்ளார். ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ளது. பகிர்தல்: 

இன்று (23) 2 மணி நேரம் 20 நிமிட மின்வெட்டு

இன்று (23) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W  வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல – ஜீவன்

” இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்லர். தனது செயல்மூலமே அவர் அதனை நிரூபித்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் […]

வேட்பு மனுக்கள்

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டன. பதுளை மாநகரசபை, பண்டாரவளை மாநகரசபை, ஹப்புத்தளை நகரசபை உட்பட பதுளை மாவட்டத்தில் 18 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றுக்கு போட்டியிடுவதற்கு […]

ஜீவன் தொண்டமான்

தலவாக்கலை,  மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து,  அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார். தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்துக்கு இன்று (22.01.2023) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார். அத்துடன், அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் […]

வேட்புமனு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், சுயேட்சைக்குழுக்களின் 6 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக 91 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாநகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 வேட்பு மனுக்களில் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், […]

A/L

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை (A/L) இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. இன்று (23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைடையவுள்ளது.    

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் – மேலும் ஆறு சபைகள் யானையுடன் கூட்டணி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளுக்கும், தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கும் சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. அத்துடன், நுவரெலியா மாநகரசபை, அட்டன் – […]

தொழிலாளர் தேசிய சங்கம்

தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான பொருட்களை வழங்கி உதவி புரிந்துள்ளார். தீ விபத்தினால் சேதமடைந்த குடியிருப்புக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினர். மேலும் அவர்களின் அடிப்படைத் […]

வீதியை மூடுவதற்கான நடவடிக்கை

நுவரெலியா – நானுஓயா – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், ஆட்டோ சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள் , […]