டிக்கோயா ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

  பல கோரிக்கைகளை முன்வைத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் இன்று (19) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் […]

ஜீவன் தொண்டமான்

ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக  நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனை கொண்டாடும் விதமாக அட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ந்தனர். கொட்டகலை பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி

to bcc: me உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சி கட்டுப்பணம் செலுத்தியது. தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சூரவீர உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினர். நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை – லிந்துலை நகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகரசபை மற்றும் 9 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. (க.கிஷாந்தன்)

இராதா

உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக ரணில் – ராஜபக்ச அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் இன்று (14.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” உள்ளாட்சிமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடபோவதாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அறிவித்துள்ளன.  இரு […]

இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமூக நீதி கொள்கைக்கு ஏற்ப இலங்கை வாழ் மலையக தமிழர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை அயலகத்தமிழர் தின மாநாட்டில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆற்றிய உரையில் இதனை வலியுறுத்தியுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவளி தமிழர்களின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரதிநிதிகளை ஒன்றுகூட்டி தமிழ்நாடு அரசு சென்னையில் இந்த மாநாட்டை நடத்தியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழ் முற்போக்கு […]

நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

வாணியம்பாடி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நகராட்சி தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சம்பத், நகர கூட்டுறவு […]

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை […]

கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு வருகிற 16-ந் திகதி விசாரணைக்கு

கூகுள் நிறுவனத்தின் இந்திய தொழில் போட்டி ஆணையத்தால் ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை வருகிற 16-ந் திகதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அதற்கு எதிராக கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் […]

மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரது பயண விபரங்கள் இதோ,