நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டம்! ( படங்கள்)

எம்.நாசர்  அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராகப் கொழும்பில் இன்று போராட்டமொன்று கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர் சேமலாப வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர்களின் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் போது, தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் […]

வெல்லம்பிட்டிய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

– எம் .நாசர்- வெல்லம்பிட்டி – கித்தம்பஹுவ பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் மோதரை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தாழ்த்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தலுக்கான அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க வேண்டும் ! வேலு குமார் MP

“பெருந்தோட்ட சமூகத்திற்கான காணி உரிமை பெற்றுக்கொடுத்தல் எனும் அடிப்படையில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கடந்த வாரம் பெருந்தோட்டத்துறை அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரன மற்றும் ராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்தவுடன் பெருந்தோட்ட அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் […]

இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் காரியாலயத்தை மாற்றாதே!13 அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை

(  நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியாவில் நீண்ட காலமாக இயங்கி வந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நுவரெலியா மாவட்ட காரியாலய த்தை இடம் மாற்ற வேண்டாம்.பொது அமைப்புகள் கோரிக்கை! தற்பொழுது நுவரெலியாவில் இயங்கிவரும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கிளை காரியாலயத்தை அட்டன் நகருக்கு மாற்ற இலங்கை  மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நுவரெலியா காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம். என நுவரெலியாவில் இயங்கிவரும் 13 பொது அமைப்புகள் பிரதிநிதிகள் […]

ஸ்ரீலங்கன் டொப் 100 விருது பெற்ற ” அண்ணாச்சி நியூஸின் கிழக்கின் பிரதம நிர்வாகி, சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர்!

  கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும்  அண்ணாச்சி நியூஸின் கிழக்கு மாகாண பிரதம  செய்தி நிர்வாகியும் .சிரேஷ்ட ஊடகவியலாளருமான நூருல் ஹுதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் டொப் 100 விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.   15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வரும் இவர் ஆய்வுக்கட்டுரைகளை வரைவதிலும், சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் ஊடகங்களுக்கு அறிக்கையிடுவதிலும் முன்னிலை வகிக்கும் ஒருவராவார். அரசியல், சமூக, சமய, பொருளாதாரப் […]

வவுனியாவில் 1 லட்சத்து 62 ஆயிரத்திற்கு விற்பனையான “மாம்பழம்” ! இந்த சாதனையை முறியடிக்க யாராவது இருக்கீங்களா?

  மாம்பழம் ஒன்று 162 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம், வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் இடம்பெற்றுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான சனிக்கிழமை (26) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர், 1 […]

வரலாற்றில் முதல் தடவையாக இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “KIDS ENGLISH CAMP-2023”

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக “English language Development Academy” (ELDA) நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் வருடாந்த சிறுவர் ஆங்கில பயிற்சி முகாமும், பரிசளிப்பு நிகழ்வும் பொத்துவில் நாவலாறுப் பிரதேசத்தில் நடைபெற்றது. இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் வழிகாட்டலிலும் ELDA நிறுவனத்தின்பணிப்பாளர் டீ.கே.எம். மௌசீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆங்கில விருத்திக்குப் பொறுப்பாக இருந்து செயல்படும் […]

பசறை 13 ஆம் கட்டையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

ராமு தனராஜா   பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13 ஆம் கட்டை லுணுபிஸ்ஸபதன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27 ஆம் திகதி) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்த 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவரின் வீட்டுக்கு நீர் வராததால் மரணித்த நபரின் வீட்டுக்கு மேலே உள்ள நீர் ஊற்றில் இருந்து வரும் நீர் குழாயை திருத்துவதற்கு சென்ற […]

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ! ஒருவர் காயம்

சஷி புண்ணியமூர்த்தி மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது. இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கடந் சில காலமாக இருகுழுக்ககளுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலனாக இன்று இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை […]

யாழில் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்!

யாழ்.வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன.   இன்று (27_08_2023) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் (Sritharan Apputhurai) Sir அவர்கள் தலைமையிலான மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.