போதை வஸ்து பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்!

அஸ்ரப் அலீ காத்தான்குடியில்போதை வஸ்து பாவனை மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக காத்தான்குடியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா […]

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை கோரும் ஆளுநர் !

அஸ்ரப் அலீ பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக்கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி சார்ள்ஸ் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்ட 14, 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமைக்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.திருமதி […]

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா! சலசலப்பு கட்டுப்பாடுத்திய பொலிசார்!

ப.நாகேந்திரன் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா இன்று (18/08/2023 )நடைபெற்றது   குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு அமைதியான முறையில் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த பகுதிக்கு வருகைதந்த குருந்தி விகாரை விகாராதிபதியின் வருகையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.   #Kurunthoormalai ‘kurundi vihara’ Buddhist monk Galgamuwa santhabodhi entered the area where the Tamil people were peacefully engaged in Pongal worship as per the […]

கிழக்கு மாகாண கொடி திருத்தியமைக்கப்பட வேண்டும் ஹரீஸ் MP ஆளுநரிடம் வேண்டுகோள்!!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்ய கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா பிரதித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்று மாகாணத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை முன்னெடுத்துவரும் பணியின் மற்றுமொரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இன மக்களினதும் அடையாளங்களை […]

மத்திய மாகண குடிநீர் வழங்கல் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடிய அமைச்சர் ஜீவன்

 (நூரளை பி. எஸ். மணியம்) மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்து, நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் […]

மலையக அரசியல்வாதிகளும் வரட்டு கௌரவத்தை விட்டு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – திருமுருகன்

  (நூரளை பி. எஸ். மணியம்) 200 வருடங்கள் வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட மக்களின்  வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் உணர்வு பூர்வமாக செயல் பட முன்வரவேண்டும். பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கையை கட்டியெழுபி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகின்றார். இதற்க்கு மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வரட்டு கௌரவத்தை ஓரங்கட்டிவிட்டு இதற்க்கு முழு ஒத்துழைப்பு வழங்க […]

தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

  (நூரளை பி. எஸ். மணியம்)    ‘ தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்.” – என் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொழும்பு அமைச்சில் நேற்று  (17)வியாழக்கிழமை  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்மிடம் உள்ள 324 நீர் உற்பத்தி நிலையங்களில் 2 […]

குருந்தூர் மலையில் பொலிஸார் குவிப்பு! பௌத்த வழிப்பாடுகள் ஆரம்பம்!

அஸ்ரப் அலீ குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்கள மக்கள் சுமார் 5 பஸ்களில்  மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில், ஈடுபட்டு வருகின்றனர்.   முல்லைத்தீவு மாவட்டத்திலே இன்றையதினம் பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் 03 பஸ்கள் மற்றும் 02 ஹன்ரர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக கொண்டு வரப்பட்டிருக்கின்றார்கள். […]

வவுனியாவில் இரு மாணவர்கள் நீர்க்குழியில் விழுந்து பலி

அஸ்ரப் அலீ வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியானது வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர் நிரம்பிய குழியொன்றுக்குள் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியாப் பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இரண்டாவது தினமான நேற்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்நிரம்பிய குழியொன்றுக்குள் […]

ஹோமாகம தொழிற்பேட்டையில் பாரிய தீவிபத்து! தீயணைப்பு படை களத்தில்

அஸ்ரப் அலீ ஹோமாகம தொழிற்பேட்டையில் இன்று முன்னிரவு தொடக்கம் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது இதனையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடாக ஹோமாகம மற்றும் கட்டுவனை பிரதேசங்களுக்கு வௌியார் வருகை தருவதைத் தவிர்க்குமாறும் பிரதேசத்தில் வசிப்பவர்கள் முகமூடி அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் குறித்த பிரதேசங்களில் இருக்கும் குடிநீர்க் கிணறுகளை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது