இன்று பொசன் பௌர்ணமி தினம்

இலங்கைக்கு மஹிந்த தேரரின் வருகையால பௌத்த மதம் போதிக்கப்பட்ட பொசன் பௌர்ணமி தினம் இன்று அனுஷ்க்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று பல்வேறு மத வழிப்பாடுகளில் பௌத்தர்கள் ஈடுப்படுவர். இதேவேளை, மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் இதனை கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த […]

காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு

உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது […]

நீதி வேண்டும்…

வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின்  மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால்  முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் […]

இலங்கை பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகின்றது – IMF

இலங்கை பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பணி இதற்கு காரணமாகியுள்ளதாக IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுரா இலங்கை விஜயத்தை அடுத்து இதனை தெரிவித்துள்ளார். எனினும் பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் அவசியம் எனவும் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார். கென்ஜி ஒகமுரா இலங்கையில் ஜனாதிபததி, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி […]

ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை

தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் […]

ஜனாதிபதியின் இலக்கு

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார். “தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு […]

பொருட்களின் விலை குறைக்கப்படும்?

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளின் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம்

மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அமைச்சர்  ஜீவன் தொண்டமானுடன் இன்று (01) பேச்சு நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் […]

கொட்டகலையில் இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவை

கொட்டகலை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார சபையின் ஹட்டன் கிளை காரியாலயத்தின் ஊடாக கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தில் 02/06/2022 நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையூடாக புதிதாக மின்சாரம் இணைப்பை மேற்கொள்ள இருப்பவர்கள்,மின்சார பட்டியல் தொடர்பான விபரங்கள்,மின்சார பட்டியலின் பெயர்மாற்றம்,பாதிக்கப்பட்ட தூண்களை மாற்றுதல் உட்பட மின்சார சபையூடாக முன்னெடுக்கப்படும் சகல வேலைகளும் செய்து தர உள்ளதாகவும் கொட்டகலை நகரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கொட்டக்கலை வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.