1,200 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் இந்த “பௌத்தலோக மத அனுஷ்டான நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது.கொழும்பு வலயத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன்,பிரதான பௌத்த பிரசங்கத்தை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் தேரர் இத்தாலி மிலானோ லங்காராம விகாராதிபதி மேல்மாகாண கொழும்பு களுத்துறைப் பிரிவின் பிரதம நீதிமன்ற சங்கநாயக்கருமான, […]

பேதமன்ற பத் தன்சல்…

இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையகத்தின் அட்டன் நகரத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது. இந்த அன்னதான நிகழ்லில் இன மத பேதமின்றி, நகர மற்றும் கிராம மக்கள் தோட்டபுர மக்கள்¸ அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ உட்பட பலர் கலந்துக் கொண்டனர். (க.கிஷாந்தன்)

இன மத பேதமின்றி மலையகத்தில் வெசாக்…

நாடளாவிய ரீதியில் இன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வின் போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புற மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் […]

போரில் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை

உக்ரைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், இரண்டாம் உலகப் போரின் போது தோற்கடித்தது போல் அவர்களைத் தோற்கடிப்போம் என்கிறார் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ட்ஜகார்யன். இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த ரஷ்ய போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் உள்ள போர் நினைவுத்தூபியில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்ட போதே தூதுவர் (Levan Dzhagaryan) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

7 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் மூன்று மாவட்டங்களில் 7 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டடட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹாலிஎல, பசறை, பதுளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(05) இரவு 7 மணிவரை […]

அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை

” அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை” என  புத்தபெருமான் போதித்துள்ளார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்து, நாட்டை மீட்கவும், இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய தீர்வைக்கண்டு இலங்கை மண்ணில் நிலையான அமைதி மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” போதிமாதவன் புத்தபெருமானின் பிறப்பு, இறப்பு, […]

விசேட போக்குவரத்து சேவை

நாடளாவிய ரீதியில் அனைத்து வெசாக் பகுதிகள் மற்றும் விசேட புனித ஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் இன்று முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வெசாக் வாரத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த போக்குவரத்து சேவை இயங்கும் என அதன் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்தார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது […]

வெசாக்: 7000 தன்சல்கள்…

வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHI அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் – IMF

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடனை […]

டெங்குவைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்

‘டெங்கு  3 வைரஸ் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், டெங்குவைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறுகிறார். இதேவேளை, நோய் எதிர்ப்பு சக்தியை விருத்தி செய்யும் வகையில் செயற்படுவது டெங்கு தொற்றைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. டெங்கு ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என்ற நான்கு குழுக்களில், ‘டெங்கு 3’ […]