ஒன்று திரண்ட காத்தான்குடி மக்கள்! தீர்வை தா என கோரிக்கை ! ஜனாதிபதிக்கு மகஜர்!

கத்தான்குடி நிருபர் முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வலியுறுத்தி காத்தான்குடியில் இன்று (03) கவனஈரப்பு பேரணியொன்று இடம் பெற்றது. 1990 ஓகஸ்ட் மாதம் 03ம் திகதி காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]

” வேர்களை மீட்டு உரிமையை வெல்வோம்” யாழில் மலையக மக்களுக்கு பேராதரவு!!

வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதேவேளை புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது புதுக்குடியிருப்பிலிருந்து மலையகம் நோக்கிய நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமானது. நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் ஆரம்பமான நடைபயணம் கிளிநொச்சியில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று காலை 9 மணியளவில் டிப்போ சத்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி இரணைமடு சந்தி, முறிகண்டி, மாங்குளம் என […]

நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு*.

(நலிர் அகமட்) ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ஒடுக்கும் தன்னிச்சையான செயலாகும் என்றும், மக்களின் தோள்களில் சுமையை ஏற்றி எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிட்டிய நாட்களில் எரிவாயு விலையும் அதிகரிக்கப்படும் போது மக்கள் ஆதரவற்றுப்போவர் என்றும்,அரசாங்கம் மக்கள் மீது எந்த உணர்வும் […]

கனடிய பிரதமர் விவாகரத்து

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரதமர் ட்ரூடோ, மனைவியான ஸோப்பி கிரகரி ட்ரூடோவை பிரிவதாக தெரிவித்துள்ளார். 18 ஆண்டு திருமண வாழ்க்கை முற்றுப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிந்து வாழத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஏன் திடீரென பிரியத் தீர்மானித்தார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த தம்பதியினர் திருமண வாழ்வு நிறைவுக்கு வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து வாழ்வதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். எப்பொழுதும் […]

மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கும் புதிய மாப்பியா! ஆதரத்துடன் நிருபிக்கும் சஜித்!

  விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும்,எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும்,அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும்,அதில் பணம் சுரண்டப்படுதே இடம்பெறப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டீசல் மாபியாக்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பலர் இந்த அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டொலர் முட்டிகளிலிருந்து கொமிசன்களை பெறத் தயாராக உள்ளனர் என்றும், மருந்துகளை கொள்வனவு செய்யும் […]

5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! ஊவா மாகண பற்றாகுறை நீங்குமா

தற்போதைய நிலையில் நாட்டில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நீக்கும் முகமாக 5 ,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வின் விசேட  அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆசிரிய நியமனத்திலாவது ஊவா மாகணத்தில் தமிழ்  உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரிய பிரச்சினை தீருமா என்று கேள்வியௌ ஊவா மாகண பெற்றோர் கேட்கின்றனர்

வரக்காபொலயில் விபத்து ! பெண் மரணம் , 10 பேர் காயம் !!

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் . இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும்  மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

எம்.ஜி. ஆர் சிலைக்கு பெயிண்ட் அடித்தவர் கைது! சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார் முன்னாள் அமைச்சர் !

சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியதாக லியோ நார்ட் என்பவர் கைது செய்யப்பட்டார் எம்ஜிஆர் சிலை மீது இருந்த பெயிண்டை நீக்கி பால் ஊற்றினார் ஜெயக்குமார் எம்ஜிஅர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்

ஹரியானவில் மதக்கலவரம் 5 பேர் பலி! பாதுகாப்பு தீவிரம்!!

இந்திய ஹரியானாவில் இரு மதத்தினர் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இஸ்லாமிய இமாம் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஹரியான தகவல்கள் கூறுகின்றன. ĵ குறிப்பாக ஹரியான நூர் பகுதியில் ஒரு மத  அமைப்பினர் நடத்திய சுவாமி ஊர்வலம் தீடிரென கலவரமாக வெடித்துள்ளது. இதனால் ஹரியானவின் குருகரம் உட்பட பல பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

BBCயின் ஊடக குரல் விமல் லண்டனில் அகால மரணம்!!

ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் மற்றும் BBC தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் அகால மரணமடைந்தார். என லண்டன் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை மூத்த ஊடகவியலாளரான  வி.என் மதியழகன் தனது முகநூலில் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் காலமானார்கள் என்ற செய்தியை ஒஸ்ரேலிய இன்பத் தமிழ் வானொலி அதிபர் பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் இந்திய தகவல் ஒன்றை ஆதாரம் காட்டி சில வினாடிகள் முன்னம் என்னுடன் பெரும் சோகம் மேலிட […]