LPL : தொழில்நுட்ப குழு

நான்காவது லங்கா பிாிமியா் லீக் தொடருக்காக 4 போ் கொண்ட தொழில்நுட்ப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக பந்துல திஸாநாயக்கவும், உறுப்பினா்களாக ஷேன் பொ்னாண்டோவும், தரங்க பரனவித்தானவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் டிரோன் விஜயவா்தன உறுப்பினராகவும், செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். லங்கா பிாிமியா் லீக்கின் போட்டிகள், இலங்கை கிாிக்கட் நிறுவனத்தின் விதிகளுக்கு அமைய இடம்பெறுகிறதா? என்பது தொடா்பில் ஆராய்வதே குறித்த குழுவின் பிரதான பொறுப்பாகும். 2023ம் ஆண்டு லங்கா பிாிமியா் லீக் தொடா், எதிா்வரும் ஜூலை மாதம் 30ம் […]

இந்து சமுத்திர பாதுகாப்பு மேம்பட வேண்டும்…

இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue சிங்கப்பூரில் ஜூன் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை […]

ரஷ்யா பதிலடி

உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் உக்ரைன் படைகள் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலை முறியடித்து ரஷ்யா பதிலடி கொடுத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இகோர் கொனாஷென்கோ தெரிவித்தார். அதற்கு முந்தைய நாள், ரஷ்ய தாக்குதல்களால் சுமார் 250 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. பக்முத் நரகாவின் கிழக்குப் பகுதியில் உக்ரைன் தாக்குதல் தொடங்கியுள்ளது என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் அன்னா மாலியா தெரிவித்தார். எவ்வாறாயினும், உக்ரைன் மேற்கொள்ளவிருக்கும் பாரியளவிலான எதிர்த்தாக்குதல் நீண்டகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா […]

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இவ்விஜயத்தின் […]

மலையகம் தொடர்பான புதிய அக்கறை எமது முயற்சிகளின் பலாபலன் – தமுகூ தலைவர் மனோ

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா  ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐநா, உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும்  அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள்  காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பலநாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் […]

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவு

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (05.06.2023) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகன் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்து புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு தேசிய மட்டத்தில் பரீட்சை […]

பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும்

புசல்லாவை, பெரட்டாசி தோட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று (05.06.2023) முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர். கடந்த மே 27 ஆம் திகதி இ.போ.ச பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது. பஸ் சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன. எனினும், கண்டி […]

இஸ்ரேலிய இராணுவத்தின் மீது தாக்குதல்

எகிப்து எல்லைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் இரு தரப்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் விபத்து நடந்த பகுதியில் மீண்டும் ரயில் இயக்கம்

 ஒடிசாவில் கடந்த 2ம் திகதி மாலை சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் மோதிய பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்தில் மீண்டும் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகளை 1000க்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டனர். தொடர்ந்து ரயில் தடம் சீரமைப்பு மற்றும் மின்சார இணைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விபத்து […]

ரயில் தடம் புரண்டது எப்படி?

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தததாக தலைமைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 1 175 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமை செயலாளர் கூறினார். ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால் இந்த பேரிழிவு ஏற்பட்டிருக்கிறது. […]