ஐஸ் கிரீம் தன்சல்
மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவு கூறும் முகமாக ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தன்சல் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி தன்சல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரியவும் கலந்துகொண்டார்.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணி கள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் […]
இலங்கையணி வெற்றியை ருசித்தது
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கையணி 132 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் […]
ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16ம் திகதி இந்த தொடர் துவங்க உள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் வரும் ஜூலை 31 திகதி நிறைவடைகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் […]
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்…
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா ரயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்து ரயில் […]
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. காயமடைந்த லஹிரு குமாரவுக்கு பதிலாக […]
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் […]
ஒடிசா ரயில் விபத்து – நேரில் பார்வையிட்டார் மோடி
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விபரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கட்டாக் […]
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, அடுத்த வருடம் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் அறிவித்துள்ளார். அந்த போட்டிக்கு முன்னதாக எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள WTC இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஏஷஸ் கிரிக்கட் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச […]
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி (PHOTOS)
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற “2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டம் […]