ஒடிசா ரயில் விபத்து: 260 பேர் பலி – மீட்புப் பணிகள் நிறைவு…
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 20 ஆண்டு […]
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் – IMF
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள், வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்திலும் வெளிப்படைத்தன்மையுடனும் கடனைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுமாறு இலங்கை அதிகாரிகளை தான் ஊக்குவித்ததாக கென்ஜி ஒகமுரா கூறியுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி […]
ரயில் விபத்து – 233 பேர் உயிரிழப்பு: தமிழக அரசின் அதிரடி உத்தரவு
ஒடிசாவில் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு […]
இன்று பொசன் பௌர்ணமி தினம்
இலங்கைக்கு மஹிந்த தேரரின் வருகையால பௌத்த மதம் போதிக்கப்பட்ட பொசன் பௌர்ணமி தினம் இன்று அனுஷ்க்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று பல்வேறு மத வழிப்பாடுகளில் பௌத்தர்கள் ஈடுப்படுவர். இதேவேளை, மஹிந்த தேரரின் வருகையால் கிடைத்த தூய பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க தங்களை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் இதனை கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த […]
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில் வித்து. 200 க்கும் அதிகமானோர் பலி 900 பேர் காயம் என தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி BBC செய்தி வெளியிட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் […]
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (02) ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் தனஞ்சய த சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் Fazalhaq Farooqi மற்றும் Fareed Ahmad Malik ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை […]
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு
உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது […]
ஜோர்தான் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை மணந்தார்
ஜோர்தான் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் (Rajwa Al Saif) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமண விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது. மணமகள் ராஜ்வா அல் சைஃப் அவருக்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார். பட்டத்து இளவரசர் ஹுசைன் இராணுவ சீருடை அணிந்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன் […]
பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கடந்த மே, 2022 உடன் மே, […]
நீதி வேண்டும்…
வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் […]