சிம்பாபேயில் பணவீக்கம் உச்ச நிலை…
சிம்பாபேயில் பணவீக்கம் உச்ச நிலையை அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. ஜனாதிபதி எம்மர்சனின் கொள்கைகள் மக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் கடைசி பத்து இடங்களில் மால்டா (148), டோகோ( 149), தாய்லாந்து (150), நைகர் (151), தைவான் (152), மலேசியா (153), ஜப்பான் (154), அயர்லாந்து (155), குவைத் (156), ஸ்விட்சர்லாந்து (157) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறைந்த சதவீதத்தில் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜ ஜாலி…
O/L பரீட்சையை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(26) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜீவன்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தலைமைச்செயலாளர் மற்றும் அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்து, கிழக்கு மாகாணத்துக்குரிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சு நடத்தினர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுதருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது உறுதியளித்தார். இதன் ஓர் அங்கமாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள நீர்விநியோக […]
இலங்கைக்கு கிடைத்த இடம்
உலகில் அதிக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 157 நாடுகளை உள்ளடக்கிய வகையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தாக்குதல் – பொலிஸார் அறிவுறுத்தல்
ஜப்பானில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம் மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தாக்குதல்தாரி அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களை பாடசாலைகளிலேயே தங்க வைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஜப்பானில் […]
கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவனைக் காணவில்லை
கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவன் ஒருவனை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மானிடோபாவின் வின்னிபெக் பகுதியில் வைத்து சிறுவன் காணாமல் போயுள்ளான்.வைத்து சிறுவன் காணாமல் போயுள்ளான். இனுக குணதிலக்க என்ற தரம் 10ல் கற்கும் மாணவனெ இவ்வாறு காணாமல் போயுள்ளான். இந்த மாணவனிடம் செல்லிடப்பேசி இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவின் பன்முகத்தன்மை பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்
பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து கொண்டு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். ஜப்பானிய நிக்கேய் பத்திரிகை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த மாநாடு […]
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி, பரிசளிப்பு
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த […]
IMF முன்மொழிவு பற்றி ஜப்பானில் அதிக கவனம்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு நிதி அமைச்சர்ஷுனிச்சி சுஸுகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தச் சந்திப்பில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.