கூட்டணி எம்.பியொருவர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார்- ஜீவன்
“தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தான் அவர் கண்டி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் கூட வந்தார் என்பதையும் கூறியாக வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் […]
ஜூலை 15 முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது
ஜூலை 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 10% விலையில் திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் […]
நியூயோர்க் அச்சுறுத்தலில்?
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்கள் சில தாழிறங்கும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அங்குள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சில தாழிறங்கும் அச்சுறுத்தலை எதிர்க் கொண்டுள்ளன. குறிப்பாக நியூயோர்க் நகரம் இதனால் கூடுதலான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நியூயோர்க்கில் கடல் மட்டம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நிவாரண திட்டத்தில் மெளனமாக இருப்பது நியாயமா?
“அன்று சமூர்த்தியில் எமது மக்கள் ஓரம்கட்டப்பட்ட போது மெளனமாக இருந்தார்கள். இன்று புதிய நிவாரண திட்டத்தில் எமது மக்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கும் போது புரளி என்கிறார்கள்.” என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரித்திருத்த விவாதத்தத்தின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கருத்து வெளியிட்டார். எமது மக்கள் ஐந்தாறு பரம்பரையாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். இருநூறு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்போதும் ஆரம்பநிலை பிரச்சினையையே பேச வேண்டியுள்ளது. எமது மக்கள் தொடர்ச்சியாக நிவாரண கொடுப்பனவுகளில் […]
IPL ஓய்வு குறித்து தோனியின் பதில்…
“மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்” என் தோனி தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே Off போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோனி மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார் “இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை. பிராவோ போன்ற உதவியாளர்கள் இந்த விஷயத்தில் […]
ஜூன் 12க்கு முன்னர் சீருடை விநியோகம் நிறைவு
மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து பெறப்பட்ட சீருடைத் துணிகள், வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து 38 இலட்சத்து 31 ஆயிரம் மீட்டர் சீருடைத்துணிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 95 வீதமானவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 27000 மீட்டர் சீருடைத் […]
இதுவரை 36560 டெங்கு நோயாளர்கள்
நாட்டின் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுள் 15 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 36560 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் […]
LPL போட்டிகளில் ஆட்ட நிர்ணயமா?
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் அபுதாபி T10 போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுப்பட முயன்ற குற்றச் சாட்டில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு எதிராக தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. 33 வயதான டெவோன் தோமஸ் என்பவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ICC ஊழல் தடுப்புச் சட்டங்களின்படி, தோமஸ் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் உள்ளது. 2021 ஆம் […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 04 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ண போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் நடக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
இறுதிப் போட்டியில் CSK
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்பின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று – 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் […]