உக்ரைன் போர்க்களத்திற்கு அமெரிக்க போர் விமானங்கள்?
அமெரிக்கா தயாரித்த எஃப்-16 ரக அதிநவீன போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் விமானிகளுக்கு உரிய விமானங்களை ஓட்டுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் நடைபெற்ற G07 தலைவர்கள் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் வான் சக்தியை […]
SLC தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.
7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம்
ஜூன் மாதம் 15ஆம் திகதி 7,800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள […]
கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை பதில்
இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. கனேடிய பிரதமர் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நாளாகக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சு, ஒரு நாட்டின் முக்கிய தலைவர் ஒருவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் பக்கச்சார்பான அறிக்கைகளால் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக ஒற்றுமையின்மையும் வெறுப்பும் பரவி வருவதாக கூறுகிறது. இலங்கையில் நடைபெற்ற வெற்றிக் […]
14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு…
தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் இன்று (19) நடைபெற்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை […]
“உக்ரனை விட்டுவிடுங்கள்”
G7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை. […]
ரெயின்போ ஜெர்சியில் களம் காணும் டெல்லி கேபிடல்ஸ்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி (DC) நாளை எதிர்கொள்கிறது . இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் டெல்லி அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சீசன் முதல் இந்த வழக்கத்தை டெல்லி அணி கொண்டுள்ளது. சீசனின் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் இந்த ரெயின்போ ஜெர்சியை டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள். இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய எந்தவொரு போட்டியிலும் […]
சீன ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மத்திய ஆசியாவின் வளர்ச்சிக்கான தனித்துவமான திட்டத்தை வெளியிடுள்ளார். பிராந்தியத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய ஆசியா பொதுவாக ரஷ்ய செல்வாக்கின் கீழ் உள்ள ஒரு பகுதி. கஜகஸ்தான்இ கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி கூறினார். சீனாவில் இடம்பெற்ற சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]
டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம்
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 […]
அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்
“அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.