CWC தலைவர் ஆளுநர் பதவிக்கு வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். அதேபோல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், இது தொடர்பில் மேலும் […]

ஹாரி மற்றும் மேகனைத் துரத்திய புகைப்பட கலைஞர்கள்

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூயோர்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட […]

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்) சேத்திய குணசேகர தெரிவித்தார். இந்த உரிமை கோரல் கோரிக்கை மனு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மே 15 ஆம் திகதி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (பொதுவான பிரிவு) விசாரணைக்கு எடுத்துக் […]

கடந்த கால தவறுகளை திருத்தியமைக்க முடியும்

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்  நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் தள்ளப்பட்டமை மற்றும் தங்களது எதிர்காலம் தொடர்பில் இளையவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரசாங்க அதிகாரிகள் வரையில் அனைவரும் […]

T20 – சமரி முதல் 10 இடங்களுக்குள்..

மகளிருக்கான T20 போட்டியில், உலகின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசையில்  இலங்கை மகளிர் அணித் தலைவர் சமரி அத்தபத்து முதல் 10 இடங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளார். தரவரிசையில் அவர் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய சமரி அத்தபத்து, 103 ஓட்டங்களைப் பெற்றார். மேலும், பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தியதன் காரணமாக அவர் மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசையில் […]

மியான்மரை புரட்டிய மோக்கா புயல் – பலி எண்ணிக்கை 81 ஆக உயா்வு

மியன்மாரை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மோச்சா’ புயல் உலுக்கியெடுத்தது. அங்கு ‘மோச்சா’ புயலுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை தற்போது 81 ஆக உயா்ந்துள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோச்சா’ புயல் மியன்மாரில் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதன்போது, மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில், ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கா் கிராமங்களில் மட்டும் 41 போ் பலியாகினா். இந்த பகுதியில்தான் மியன்மார் அரசால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் […]

சீனாவில் இருந்து நல்ல செய்தி

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன நிதி நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்த விஷயத்தில் சீனா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்த நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து சார்க்கோசி மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி சிறைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் வீட்டில் […]

SJB பதவிகளில் மாற்றம்

சமகி ஜன பலவேகவின் (SJB) செயற்குழுவின் ஒப்புதலுடன் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா சமகி ஜனபலவேகவின் உப பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

JEDB பேச்சு வார்த்தை வெற்றி

JEDB பெருந்தோட்ட யாக்கம் ளுடுளுPஊ மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் நிறுவன அதிகாரிகளுக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரொமேஷ் பத்திரன நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய முக்கிய உத்தியோகஸ்தர்கள் விஜயகுமார் தியாகராஜ் கிருஷ்ணகுமார் தாண்டவன் புவனேந்திரன் இடையிலான கலந்துரையாடல் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் […]