மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு (Photos)
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என […]
வீடொன்றுடன் மோதிய எரிபொருள் கொள்கலன்
ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06.05.2023) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த […]
இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை
2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் லாஹூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய குழுவின் பிரதான சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தேரா ஸ்மைல் கான் நகரில், பாகிஸ்தான் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இக்பால் அல்லது பாலி கயாரா என அழைக்கப்படும் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் பாகிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பின் துணை பிரிவுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்பால் […]
1,200 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு
சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் இந்த “பௌத்தலோக மத அனுஷ்டான நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது.கொழும்பு வலயத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன்,பிரதான பௌத்த பிரசங்கத்தை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் தேரர் இத்தாலி மிலானோ லங்காராம விகாராதிபதி மேல்மாகாண கொழும்பு களுத்துறைப் பிரிவின் பிரதம நீதிமன்ற சங்கநாயக்கருமான, […]
பேதமன்ற பத் தன்சல்…
இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையகத்தின் அட்டன் நகரத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது. இந்த அன்னதான நிகழ்லில் இன மத பேதமின்றி, நகர மற்றும் கிராம மக்கள் தோட்டபுர மக்கள்¸ அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ உட்பட பலர் கலந்துக் கொண்டனர். (க.கிஷாந்தன்)
இன மத பேதமின்றி மலையகத்தில் வெசாக்…
நாடளாவிய ரீதியில் இன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வின் போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புற மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் […]
போரில் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை
உக்ரைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், இரண்டாம் உலகப் போரின் போது தோற்கடித்தது போல் அவர்களைத் தோற்கடிப்போம் என்கிறார் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ட்ஜகார்யன். இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த ரஷ்ய போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் உள்ள போர் நினைவுத்தூபியில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்ட போதே தூதுவர் (Levan Dzhagaryan) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு அணியின் உரிமையில் மாற்றம்
இந்த ஆண்டு LPL தொடரில் இணையும் கொழும்பு அணியின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இம்முறை அணி SKKY குழுமத்திற்கு சொந்தமானது. இது அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாகக் கொண்ட வணிகங்களின் வலையமைப்பாகும். அந்த வணிகத்தின் உரிமையாளர் சாகர் கண்ணா, இந்திய நாட்டவர். அதன்படி, எல்பிஎல் போட்டி வரலாற்றில் கொழும்பு அணியின் பெயர் மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
செர்பியாவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் அந்நாட்டிலிருந்து நீங்காத நிலையில் தற்போது மீண்டும் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரெட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில்தான் புதிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆயுதம் ஏந்திய நபர் காரில் அமர்ந்து கொண்டு மால்டினோவா – டுபோனா கிராமங்களில் நடத்திய துப்பாக்கிச் […]
7 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களில் 7 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டடட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹாலிஎல, பசறை, பதுளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(05) இரவு 7 மணிவரை […]