புடின் தன்னைத்தானே அடித்துக் கொள்கிறார்

தவறு காரணமாக, ரஷ்ய போர் விமானம் உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தனது நாட்டுக்கு சொந்தமான நகரம் மீது தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு பெல்கொரோட் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக இரண்டு பேர் காயமடைந்தனர் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. தாக்குதல் காரணமாக நகரின் மையத்தில் 20 மீட்டர் அகலத்தில் பள்ளம் உருவாகியுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 370,000 மக்கள் வசிக்கும் பெல்கோரோட் […]

சூடானில் போர் நிறுத்தம்

சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரமழான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளன. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடன் கூறுகையில், “சூடான் கலவரம் தொடர்பாக ஆப்பிரிக்க யூனியன், அரபு லீக் மற்றும் பிற அமைப்புகளுடன் ஆலோசித்துள்ளேன். […]

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல்

காஷ்மீர் – இமயமலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவிய நிலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தத்தை மீறி சூடானில் தாக்குதல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை, […]

பாகிஸ்தான் மசகு எண்ணெய் கொள்முதல்?

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான உத்தரவை ரஷ்யாவிடம் சமர்ப்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் முதல் ரஷ்ய கப்பல் வரும் மே மாதம் கராச்சி துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்கின்றன.

IMF – விவாதத்திற்கு திகதி நிர்ணயம்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழான ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளும் விவாதத்திற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இன்று (20) காலை ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கூடவுள்ளது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி?

அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது. இனி, ராகுல்காந்தி, இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க மனுவும் […]

தினமும் இரு வேளை குளிக்க வேண்டும்: வைத்தியர்கள் ஆலோசனை

வெப்பத்தினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதிக திரவங்களை குடிப்பது வெப்பமான காலநிலையிலிருந்து சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அவர் கூறுகிறார். மேலும் இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் கூட தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.

புத்தாண்டு அழகன் மற்றும் அழகி (Photos)

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’(சூரிய மங்கல்லய) நிறைவு நாள் வைபவம் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் பங்கேற்புடன், நாள் முழுவதும் இடம்பெற்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல புத்தாண்டு விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமயமான நடன நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார். புத்தாண்டு அழகன் மற்றும் அழகி […]

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தென்படாத ‘ஹைபிரிட் சூரிய கிரகணம்’

ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்றைய தினம் (20) பதிவாகியுள்ளது. இது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo Solar Eclipse) அல்லது ஹைபிரிட் சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse ) என வானியல் அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு ‘சூரிய கிரகணம்’ என அழைக்கப்படுகின்றது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது ‘முழு சூரிய கிரகணம்’ எனவும் ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது ‘பகுதி […]