நீதி வேண்டும்…

வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் […]
நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2023 ஆம் ஆண்டு முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டப் படிப்பு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலைபருவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளது.
எரிமலை – கட்டானியாவிற்கான விமானங்கள் ரத்து

இத்தாலி தலைநகர் ரோமில் கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து. கடைசியாக எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால், பிரபல […]
கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி (Photos)

கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா […]
சாரதிகளுக்கு எச்சரிக்கை…

பஸ் சாரதிகள் போதையில் பஸ்களை செலுத்துகிறார்களா? என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“உக்ரனை விட்டுவிடுங்கள்”

G7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை. […]
புதிய ஆளுநர்கள் (Photos)

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் […]
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் ஜனாதிபதி பணிப்புரை

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார். களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு […]
முதற்கட்ட இலங்கை அணி

உலகக் கிண்ண தகுதிச் சுற்று மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளுக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை அறிவித்துள்ளது. 7 பேட்ஸ்மேன்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 8 ஆல்-ரவுண்டர்கள் அடங்கிய ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான ஆரம்ப அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விக்கெட் கீப்பர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். T20 உலகக் கிண்ணப் போட்டியில் காயமடைந்த துஷ்மந்த சமிர 7 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை அணிக்கு […]