சிம்பாப்வேயில் நாளை தகுதிச்சுற்று, இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ண இலங்கைக்கான தகுதிச் சுற்றுப் போட்டி நாளை (18) சிம்பாப்வேயில் தொடங்குகிறது. தகுதிச் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் இரு அணிகளும் ஒருநாள் உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி சிம்பாப்வேயில் நடைபெறவுள்ளதுடன், அதற்காக 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 34 போட்டிகள் கொண்ட போட்டி ஹராரே மற்றும் புலவாயோவில் நடைபெறவுள்ளது. போட்டியில் […]

டிப்ளோமாதாரிகள் 7342 பேருக்கு ஆசிரியர் நியமனம்

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி […]

கருத்துரிமையை பறிக்கமாட்டேன்: ஜனாதிபதி

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும்  எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஐக்கிய ராச்சியத்திலுள்ள முறைமையை முழுமையாக […]

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதின

ஜப்பானிய விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் ஹனேடா விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய் ஏர்வேஸ் மற்றும் ஈவிஏ ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்து காரணமாக விமான […]

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துக – ஜனாதிபதி

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க […]

ரஷ்யா பதிலடி

உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் உக்ரைன் படைகள் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலை முறியடித்து ரஷ்யா பதிலடி கொடுத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இகோர் கொனாஷென்கோ தெரிவித்தார். அதற்கு முந்தைய நாள், ரஷ்ய தாக்குதல்களால் சுமார் 250 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது. பக்முத் நரகாவின் கிழக்குப் பகுதியில் உக்ரைன் தாக்குதல் தொடங்கியுள்ளது என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் அன்னா மாலியா தெரிவித்தார். எவ்வாறாயினும், உக்ரைன் மேற்கொள்ளவிருக்கும் பாரியளவிலான எதிர்த்தாக்குதல் நீண்டகாலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா […]

நீதி வேண்டும்…

வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின்  மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால்  முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் […]

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2023 ஆம் ஆண்டு முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளமை குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டப் படிப்பு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலைபருவத்தின் மூன்றாம் கட்டம் தொடங்க உள்ளது.

எரிமலை – கட்டானியாவிற்கான விமானங்கள் ரத்து

இத்தாலி தலைநகர் ரோமில் கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து. கடைசியாக எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால், பிரபல […]

கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி (Photos)

கௌரவமாக நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா […]