நஷ்ட ஈடு வழங்கவும் தயார்: Maithree
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெடர்பில் சகல கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். குறித்த பயங்கரவாத தாக்குதல் தனது ஆட்சியில் நடைபெற்றதால் அதறகு நஷ்ட ஈடு வழங்கவும் தயார் என அவர் கூறியுள்ளார்.
13 ஐ அமுல்படுத்த வேண்டும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசியலமைப்பின் […]
கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம்
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர் முன்னெடுக்கப்பட்டப்போதும் குறித்தப் பிரதேசத்தில் உள்ள ஒரு நபரினால் குறித்த நபர் சடலமாக கெசல்கமுவ ஓயாவில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்தில் உயிரிழந்த […]
குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட்டம்
மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் […]
ஒலிம்பிக்
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக்குழு அறிவித்துள்ளது. இதில் ஆடவர், மகளீர் போட்டிகள் இணைத்துக் கொள்ளப்படுமம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஞல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ளம குறிப்பிடதக்கது.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) உள்ளிட்ட அதிகாரிகள் இப்பால்மாவை நேற்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர். நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை […]
இலங்கையில் மீண்டும் ஆட்டம் காணும் கொரோனா
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்றையதினம் புதிதாக நால்வர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்றுடன் மட்டும் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் அபிவிருத்தியை விடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அபிவிருத்தியைவிடவும் மக்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான வேலைத்திட்டங்களுக்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே கொட்டகலை சுகாதார பிரிவில் சத்துணவு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.” – என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவரும், இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். கொட்டகலை பிரதேச சபை நிர்வாக எல்லையில் மந்த போசனை நிறைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 280 குடும்பங்களுக்கு அரிசி, கடலை, நெத்தலி முதலான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் […]
உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் சென்றவர்களே உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி தலைகீழாக வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட […]
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து சௌமிய பவாணில் நேற்று கலந்துரையாடல்!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும்,மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிக்ள் தெரிவித்தனர். மேலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதி தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் குழு, […]